விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்

Updated: 13 July 2019 13:40 IST

பெடரர்தான் அதிக வயதில் விம்பிள்டன்  ஆடும் மூன்றாவது வீரராவார். கென் ரோஸ்வெல் 1974லில் மிக அதிக வயதில் விம்பிள்டன் ஆடினார்.

Roger Federer Downs Rafael Nadal To Set Up Novak Djokovic Duel For Wimbledon Title
ரோஜர் ஃபெடரர் 12வது விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவரது தனது பரம எதிரியான ரஃபேல் நடாலை தோற்கடித்துள்ளார். © AFP

ரோஜர் ஃபெடரர் 12வது விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவரது தனது பரம எதிரியான ரஃபேல் நடாலை தோற்கடித்துள்ளார். 37 வயதான ஃபெடரர் எட்டுமுறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். இந்த போட்டியில் நடாலை 7-6 (7/3), 1-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் ஜோகோவிக்கை சந்திக்கிறார் ஃபெடரர்.

நான்கு முறை பட்டம் வென்றவரான ஜோகோவிச் ஸ்பியினின் ரோபோர்டாவை 6-2, 4-6, 6-3, 6-2 வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

பெடரர்தான் அதிக வயதில் விம்பிள்டன்  ஆடும் மூன்றாவது வீரராவார். கென் ரோஸ்வெல் 1974லில் மிக அதிக வயதில் விம்பிள்டன் ஆடினார். 

அரையிறுதி போட்டியில் 2008 இறுதிப்போட்டியை போல ஃபெடரர் வெல்லவில்லை, ஃபெடரர் வெல்ல வெறும் 5 பேட்ச் பாயிண்ட்களே போதும் என்ற அளவிலேயே வென்றார். மேலும் ஃபெடரர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடாலிடம் ஃப்ரெஞ்ச் ஓப்பினில் தோற்றதஒயெல்லாம் அவர் நினைவில் கொள்ளவில்லை. 

51 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டில் டைப்பிரேக்கரில் நடாலை வீழ்த்தினார் ஃபெடரர். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றை எளிமையாக முறையே நடால் மற்றும் ஃபெடரர் வெல்ல. நான்காவது செட்டில் 5-1 என்ற நிலையிஒலிருந்து தொடர்ந்து மூன்று செட்களை நடால் வெல்ல ஆட்டம் களைகட்டியது. இறுதியில் 6-4 என ஃபெடரர் வெல்ல நடால் தோல்வியை தழுவினார்.

ஜிம்மி கார்னர்ஸ்க்கு பிறகு அதிக வயதில் விம்பிள்டன் அரையிறுதியை வென்ற வீரரானார் ஃபெடரர். 

இந்த இறுதிப்போட்டி ஜோகோவிச்சின் ஆறாவது இறுதிப்போட்டியாகும். 

ஜோகோவிச் ஏற்கெனவே விம்பிள்டன்., ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் அமெரிக்க ஓப்பன்களை வென்றுள்ளார். 

இறுதிப்போட்டியில் மீண்டும் ஆடுவது மகிழ்ச்சி என்று ஜோகஓவிச் கூறியுள்ளார். ரோபார்டாவுடனான அரையிறுதி ஆட்டம் சிறப்பானதாக இருந்ததாகவும், கடினமான ஆட்டம் என்றும் கூறினார்.

ஒரு வருடத்துக்கு முன் நடாலுடனான ஆட்டத்தில் 5 செட்கள் 5 மணிரேரம் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இது அதைவிட குறைவான நேரமாகவே இருந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Laver Cup: நடாலுக்கு
Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
அமெரிக்க ஓப்பன் காலிறுதியில் தோற்று வெளியேறினார் பெடரர்!
அமெரிக்க ஓப்பன் காலிறுதியில் தோற்று வெளியேறினார் பெடரர்!
"ஃபெடருடனான போட்டிக்கு பின் கிராண்ட்ஸ்லாம்களில் வெல்லும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது" - சுமித் நகால்
"ஃபெடருடனான போட்டிக்கு பின் கிராண்ட்ஸ்லாம்களில் வெல்லும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது" - சுமித் நகால்
Advertisement