தோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய ஐசிசியின் மாஸான கவர் ஃபோட்டோ!

Updated: 21 January 2019 20:53 IST

ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி 3 அரைசதங்களுடன் 193 ரன்கள் குவித்த தோனியின் புகைப்படத்தை கவர் ஃபோட்டோவாக பதிவேற்றியது ஐசிசியின் ட்விட்டர் பக்கம்.

MS Dhoni
ஐஐசியின் ட்விட்டர் பக்கத்தினுடைய கவர் ஃபோட்டோ தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. © AFP

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐஐசி) ட்விட்டர் பக்கத்தினுடைய கவர் ஃபோட்டோ தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐசிசியின் ட்விட்டர் பக்க கவர் ஃபோட்டோவாக இந்திய முன்னாள் கேப்டனும், கீப்பருமான தோனியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி 3 அரை சதங்களுடன் 193 ரன்கள் குவித்த தோனியின் புகைப்படத்தை கவர் ஃபோட்டோவாக பதிவேற்றியது ஐசிசியின் ட்விட்டர் பக்கம்.

இதற்கு தோனி ரசிகர்களின் பதிவு அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. 

''இதுதான் ஐசிசியின் பெஸ்ட் கவர் போட்டோ'', ''ஐசிசியின் கவர் ஃபோட்டைவை போல விஷயங்களை நாம் தினமும் காலையில் கண் முழித்ததும் பார்க்க வேண்டும்'' போன்ற பாராட்டு வரிகளை பதிவு செய்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3 போட்டிகளிலும் தோனி அரை சதமடித்து அசத்தினார். மேலும் அதில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி போட்டியில் 87 ரன்களை குவித்து இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்தார்.

இந்தத் தொடரில் 193 ரன்களை குவித்து அதிக ரன் குவித்த இந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தொடர் நாயகன் விருதை பெற்ற பின்பு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய தோனி ''14 வருடங்களாக கிரிக்கெட் ஆடிய பின்பு, எந்த இடத்தில் ஆட களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான். ஆறாவது இடம் பிடிக்கவில்லை. நான்காவது இடத்தில் ஆட இறங்குகிறேன் என்று எப்போதும் கூறியதில்லை'' என்றார்.

37 வயதான தோனி 335 போட்டிகளில் ஆடி 10,000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவரது ஒருநாள் போட்டிகளின் சராசரி 50க்கும் அதிகம். 10 சதங்கள், 70 அரைசதங்களை தோனி இந்திய அணிக்காக அடித்துள்ளார்.

311 கேட்ச்கள் மற்றும் 117 ஸ்டெம்பிங்களை செய்துள்ள தோனி அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளார். அவர் இந்தத் தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி புகைப்படத்தை ஐஐசி ட்விட்டர் பக்கத்தின் கவர் ஃபோட்டோவாக வைத்துள்ளது
  • ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி 3 அரைசதங்களுடன் 193 ரன்கள் குவித்தார் தோனி
  • தோனியின் ஒருநாள் போட்டிகளின் சராசரி 50க்கும் அதிகம்
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement