மைதானத்தில் விராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்… பரபரப்பு சம்பவம்!

Updated: 12 October 2018 13:54 IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, மைதானத்துக்கு உள்ளே நுழைந்து முத்தம் கொடுக்க ஒரு ரசிகர் முயன்றுள்ளார்

India vs West Indies 2nd Test: Fan Breaches Security, Tries To Kiss Virat Kohli
ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியின் போதும், இரண்டு ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே வந்து கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர் © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, மைதானத்துக்கு உள்ளே நுழைந்து முத்தம் கொடுக்க ஒரு ரசிகர் முயன்றுள்ளார். இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால், மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அந்த அணி 589.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, தொடர்ந்த விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தப் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் குதித்து விட்டார். அவர் தொடர்ந்து கோலிக்கு அருகில் வந்து தனது போனை எடுத்து ஒரு செல்ஃபி எடுக்க முயன்றார். ரசிகரின் இந்த செயல் கோலியை மிகவும் எரிச்சல் படுத்தியது. அந்த ரசிகர் தொடர்ந்து, கோலிக்கு முத்தமிட முயன்றார். ஆனால், பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகள் ரசிகரை தடுத்து, மைதானத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர். ரசிகரின் இந்த செயலால் மிகவும் கடுப்பான கோலி, ஆட்டத்தின் நடுவரிடமும் இது குறித்து பேசினார். ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் வந்து, கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம், சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியின் போதும், இரண்டு ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே வந்து கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் டெஸ்ட்டிலும் இதைப் போல ரசிகர்கள் மைதானத்துக்கு வந்தனர்
  • கோலியை ரசிகர் முத்தமிட நினைத்தார்
  • தொடர்ந்து 2வது போட்டியில் இதைப் போன்ற சம்பவம் நடக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"ஈகோவை கைவிடுங்கள்" - டெஸ்ட் போட்டியின் போது கோலி படிக்கும் புத்தகம்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
Advertisement