“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!

Updated: 07 October 2019 12:06 IST

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “இம்ரான் கான் பேசியதெல்லாம் சுத்தப் பிதற்றல். உலகம் அறிந்த கிரிக்கெட் வீரர் இவர் கிடையாது” என்று விமர்சனம் செய்தார். 

Mohammad Kaif Slams Imran Khan, Terms Pakistan "Safe Breeding Ground For Terrorists"
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாகும், “இம்ரான் கான், தன்னை அவமானப்படுத்திக் கொள்ள புதுப் புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்” என்றார்.  © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் (Mohammad Kaif), பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் (Imran Khan) அந்நாட்டையும் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். 74வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) இம்ரான் கான் ஆற்றிய உரையிலிருந்து அவர் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார். 

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “இம்ரான் கான் பேசியதெல்லாம் சுத்தப் பிதற்றல். உலகம் அறிந்த கிரிக்கெட் வீரர் இவர் கிடையாது” என்று விமர்சனம் செய்தார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர் சேவாகும், “இம்ரான் கான், தன்னை அவமானப்படுத்திக் கொள்ள புதுப் புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்” என்றார். 

இப்படிப்பட்ட சூழலில்தான் முகமது கயிஃப், “தீவிரவாதிகள் உருவாவதற்கு மிகவும் பாதுகாப்பன இடமாக விளங்குகிறது பாகிஸ்தான். உங்களின் ஐ.நா உரை மிகவும் கீழ்த்தரமாக இருந்தது. ஒரு மிகப் பெரும் கிரிக்கெட் வீரராக இருந்த நீங்கள், தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மற்றும் தீவிரவாதிகளின் கைப்பாவையாக மாறியுள்ளீர்கள்” என்று வறுத்தெடுத்தார். 

ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தை முன்னிறுத்தி பாகிஸ்தான் அரசும், அந்நாட்டுப் பிரதமரான இம்ரான் கானும், தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியாவை விமர்சித்து வருகிறார்கள். ஐ.நா கூட்டத்திலும் இதை முன்வைத்துத்தான் அவர் பேசினார். அதற்குத்தான் இந்திய தரப்பில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • Mohammad Kaif, Pak PM Imran Khan-ன் UNGA உரையை விமர்சித்துள்ளார்
  • Mohammad Kaif, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊற்றாக உள்ளது என்றுள்ளார்
  • Imran Khan-ஐ பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“கே.எல். ராகுல் இந்தியாவின் சொந்த ஸ்விஸ் கத்தி” - பாராட்டிய முன்னாள் வீரர்
“கே.எல். ராகுல் இந்தியாவின் சொந்த ஸ்விஸ் கத்தி” - பாராட்டிய முன்னாள் வீரர்
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
புஜாரா பிறந்தநாளுக்கு குஜராத்தியில் வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
“தீவிரவாதிகளின் மையமாக செயல்பட்ற நாடு உங்களது…”- Pak பிரதமரை வறுத்தெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
Advertisement