முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!

Updated: 11 February 2019 18:57 IST

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சேர்மனுமான அமித் பண்டாரி புதுடெல்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் தாக்கப்பட்டார்.

Former India Cricketer Amit Bhandari Attacked, Admitted To Hospital
அமித் பண்டாரி புதுடெல்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் தாக்கப்பட்டார். © AFP

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சேர்மனுமான அமித் பண்டாரி புதுடெல்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் தாக்கப்பட்டார்.

23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலர் அவரை தாக்கியுள்ளனர். 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகாத சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. சண்ட் பரமானந்த் மருத்துவமனையில் தலை மற்றும் கால்களில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அமித் பண்டாரி ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது.

பண்டாரி, இரும்புக்கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டுள்ளார்.தாக்கியவர்கள் போலீஸ் வருகைக்கு முன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகாத வீரரின் பெயர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 7 இடங்களில் பண்டாரிக்கு பெரிய காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • திங்கட்கிழமை மதியம் அமித் பண்டாரி தாக்கப்பட்டார்
  • 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகாத சிலர்தான் தாக்கியுள்ளனர்"
  • சண்ட் பரமானந்த் மருத்துவமனையில் அமித் பண்டாரி அனுமதிக்கப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
Advertisement