"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்

Updated: 21 September 2019 12:54 IST

பாப் டு பிளசிஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸை சாடி தன் ட்விட்டர் பக்கத்தில், "விமான பயணங்களில் இன்று மோசமான அனுபவம். இதில் எல்லாமே தவறாக முடிந்தது" என்று பதிவிட்டார்.

Faf du Plessis To Miss Flight To India, Trashes Airline On Twitter
தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இணைய இந்திய வரவிருந்த டு பிளசிஸ் துபாயில் இருந்து இணைப்பு விமானத்தை தவறவிட்டார். © AFP

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் அக்டோபர் மாதம் விசாகப்பட்டித்தில் உள்ள டாக்டர். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடக்கவுள்ளது. டி20 அணியில் இடம்பெறாத பாப் டு பிளசிஸ், தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் இணைய இந்திய வரவிருந்த டு பிளசிஸ் துபாயில் இருந்து இணைப்பு விமானத்தை தவறவிட்டார். பாப் டு பிளசிஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸை சாடி தன் ட்விட்டர் பக்கத்தில், "விமான பயணங்களில் இன்று மோசமான அனுபவம். இதில் எல்லாமே தவறாக முடிந்தது" என்று பதிவிட்டார்.

"துபாய்க்கு வரவேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்தது. இப்போது நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட்டேன். அடுத்த விமானம் 10 மணி நேரம் கழித்து தான்," கோபமான இமோஜிகளுடன் பதிவிட்டார் டு பிளசிஸ்.

சில மணி நேரம் கழித்து, தென்னாப்பிரிக்க கேப்டன் தன்னுடைய மோசமான அனுபவத்தை தெளிவாக பகிர்ந்து, விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

"வாழ்க்கை உங்களுக்கு லெமன் கொடுத்தால், லெமனேட் செய்யுங்கள். என்னுடைய கிரிக்கெட் பேக் இன்னும் வந்தடையவில்லை. நான் அதற்காக சிரிக்க வேண்டும் ஆனால், @British_Airways இன்றைய பயணம் மிக மோசமாக இருந்து. இங்கு எல்லாமே தப்பாகிவிட்டது. இப்போது என் பேட்களை நான் திரும்பப் பெறுவேன் என்று நம்புகிறேன்," என்று ட்விட் செய்தார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பதிலளித்தது. ஆனால் ரசிகர்கள் இந்த பதிலை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மூன்று போட்டிகல் கொண்ட டி20 தொடரை ஆடி வருகிறது. தர்மசாலாவில் நடக்கவிருந்த முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல், மழை காரணத்தால் கைவிடபட்டது.

மொகாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் கோலியின் 72 ரன்களுடன் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது.

52 பந்துகளில் 72 ரன்கள் கோலி குவித்ததால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மாவின் சாதனையை முந்தினார். 150 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது

மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • பாப் டு பிளசிஸ் பிரிட்டிஷ் ஏர்வேஸை சாடி ட்விட் செய்தார்
  • இந்திய வரவிருந்த டு பிளசிஸ் துபாயிலிருந்து இணைப்பு விமானத்தை தவறவிட்டார்
  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு டு பிளசிஸ் தான் கேப்டன்
தொடர்புடைய கட்டுரைகள்
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
டாஸின் போது தென்னாப்பிரிக்காவின் Proxy கேப்டன்... கோலியின் வினோத ரியாக்‌ஷன்!
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
இலங்கையின் அரையிறுதிக் கனவு நனவாகுமா… இன்று தென்ஆப்ரிக்காவுடன் பலப்பரிட்சை! #Preview
Advertisement