தலையைப் பதம்பார்த்த பவுன்சர்… சுருண்டு விழுந்த ஸ்மித்… குலுங்கி சிரித்த ஆர்ச்சர்- ஆஷஸ் பகீர்!

Updated: 18 August 2019 11:28 IST

முதலாவது ஆஷஸ் போட்டியில் ஸ்மித், இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தார்

Jofra Archer Smirks After Injuring Steve Smith With Nasty Bouncer. Twitter Is Fuming
வெகு நேரம் முதலுதவி கொடுக்கப்பட்ட பின்னர் ஸ்மித், ரிட்டையர் ஹர்ட் ஆக முடிவு செய்தார். © AFP

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர், ஸ்டீவ் ஸ்மித்தின் தலையைப் பதம் பார்த்தது. இந்த சம்பவத்தால் ஸ்மித், ரிட்டையர்-ஹர்ட் ஆக வேண்டியிருந்தது. 

ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 3வது சதம் அடிக்கும் முனைப்பில் இருந்தார் ஸ்மித். 80 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த ஸ்மித்திற்கு ஆர்ச்சர் தொடர் பவுன்சர்கள் வீசிக் கொண்டிருந்தார். அதிலும் ஒரு டெலிவரி 92.4 மைல்ஸ் வேகத்தில் ஸ்மித்தை நோக்கி வந்தது. அதை சரியாக ஆடத் தவறிய ஸ்மித், தலையைத் திருப்பினார். இதனால், பந்து ஸ்மித்தின் பின் மண்டையில் பட்டது. அடுத்த கணமே ஸ்மித், மைதானத்தில் சுருங்கி விழுந்தார். அவருக்கு மைதானத்திலேயே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக் குழுக்கள் முதலுதவி கொடுத்தன. 

இந்த மொத்த சம்பவத்தில் ஆர்ச்சரின் நடத்தை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆர்ச்சர், ஆக்ரோஷமாக பந்து வீசினார். ஆனால், ஸ்மித் சுருங்கி விழுந்த பின்னர் ஆர்ச்சர் எள்ளிநகையாடும் வகையில் சிரித்துள்ளார். அவரில் நடத்தைதான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. ட்விட்டரில் பலரும், ஆர்ச்சருக்கு எதிராக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 

வெகு நேரம் முதலுதவி கொடுக்கப்பட்ட பின்னர் ஸ்மித், ரிட்டையர் ஹர்ட் ஆக முடிவு செய்தார். அப்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துத் திணறி வந்தது. சிறிது நேரம் கழித்து வந்த ஸ்மித் மீண்டும் களத்தில் இறங்கி இரண்டு பவுண்டரிகள் விளாசி, அவுட் ஆனார். 

முதலாவது ஆஷஸ் போட்டியில் ஸ்மித், இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தார். 12 மாத கிரிக்கெட் தடைக்குப் பின்னர் ஸ்மித் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி அது என்பது குறிப்பிடத்தக்கது. 

(AFP தகவல்களுடன் எழுதப்பட்டது)

Comments
ஹைலைட்ஸ்
  • பவுன்சருக்குப் பின்னர் ஸ்மித், ரிட்டையர் ஹர்ட் ஆனார்
  • ஆர்ச்சர் வீசிய பந்துதான் ஸ்மித்தை பதம்பார்த்தது
  • பவுன்சர் பட்ட அடுத்த கணம், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார் ஸ்மித்
தொடர்புடைய கட்டுரைகள்
அவுட் என அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்மித்தை காக்க வந்த மூன்றாவது அம்பயர்!
அவுட் என அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்மித்தை காக்க வந்த மூன்றாவது அம்பயர்!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
India vs Australia, 1st ODI: நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்யவுள்ளார் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3வது இடத்தில் பேட் செய்யவுள்ளார் ஸ்மித்!
Advertisement