"கடும் வலியோடுதான் சில போட்டிகளில் ஆடினேன்" - ஜோஃப்ரா ஆர்ச்சர்

Updated: 27 July 2019 13:37 IST

உலகக் கோப்பையில் ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய சூப்பர் ஓவரில் பந்து வீசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.

Endured "Excruciating" Pain During World Cup, Says Jofra Archer
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய சூப்பர் ஓவரில் பந்து வீசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். © AFP

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான இடத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவியாக இருந்தார். உலகக் கோப்பை தொடரில் தான் "கடுமையான வலி"யில் இருந்ததாகவும், பாதி போட்டிக்கு பின்னர் வலி குறைக்கும் மாத்திரைகள் இல்லாமல் ஆட முடியவில்லை என்றும் கூறினார். உலகக் கோப்பையில் ஆர்ச்சர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய சூப்பர் ஓவரில் பந்து வீசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு அது 5வது போட்டி, அப்போது அவருக்கு சுலுக்கு ஏற்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் இங்கிலாந்து அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதனால், மோர்கன் ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்க முடியவில்லை.

உலகக் கோப்பை தொடர் முழுவதும் காயத்துடனே விளையாடியதாக ஆர்ச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"கடுமையான வலியாக இருந்தது. ஆனால், விரைவாகவே வலி குறைந்தது." என்றார் ஆர்ச்சர்.

" ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பிறகு வலி குறைக்கும் மாத்திரைகள் இல்லாமல் என்னால் ஆட்டத்தில் ஈடுபட முடியவில்லை."

" தொடர்ந்து இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து இருந்ததால், என்னால் அப்போது ஓய்வு எடுக்க முடியவில்லை. எனக்கு 7 முதல் 10 நாட்கள் மட்டுமே ஓய்வு தேவைப்பட்டது," என்றார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாத ஆர்ச்சர் இப்போது, ஆஷஸ் போட்டியில் ஆடவுள்ளார். ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி எட்க்பாஸ்டனில் தொடங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆஷஸ் 2019: ஜோஃப்ரா ஆர்ச்சரை சீண்டிய ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றம்!
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஆர்ச்சரை கண்டு நான் பயப்படவில்லை - ஸ்மித்
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு
ஸ்மித் பற்றிய ட்விட்டுக்கு 'குறும்பான பதிவு' என பதிலளித்த ஆர்ச்சர்!
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
"ஆர்ச்சரிடமிருந்து ஆஸ்திரேலியா அதிக பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்" - ஸ்டோக்ஸ்
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
சோயப் அக்தரை பங்கமாக கலாய்த்த யுவராஜ் சிங்!
Advertisement