தடைக்கு பின் ஒரே போட்டியில் இரண்டு சதம் - ஸ்மித் நெகிழ்ச்சி

Updated: 06 August 2019 16:40 IST

பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி கொண்ட வீரர் ஸ்மித் மட்டுமே . ஸ்மித்தின் டெஸ்ட் சராசரி 62.96 ஆக உள்ளது.

Emotional Steve Smith Revels In Ashes Centuries
இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தால் வெற்றி பெற்றுள்ளது. © AFP

இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தால் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இங்கிலாந்தை 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட்டை ஆஸ்திரேலியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக கூறி ஒரு வருடம் ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தார்.

இது குறித்து பொஏசிய ஸ்மித் ''இது மிகவும் சிறப்பான இன்னிங்ஸ், முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் வெற்றிக்கு உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

"இரண்டு இன்னிங்ஸிலும் சதமடிப்பது இதுதான் முதல்முறை. இதனை செய்தது உற்சாகமளிக்கிறது, பெருமையாகவும் உள்ளது" என்றார்.

ஸ்மித்தின் ரன் குவிப்பை ப்ராட்மேனுடன் ஒப்பிட்டு வருகின்றனர். 52 டெஸ்ட்களில் ஆடி 29 சதங்களிடன் 99.94 சராசரியை பிராட்மேன் வைத்திருந்தார்.

பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி கொண்ட வீரர் ஸ்மித் மட்டுமே . ஸ்மித்தின் டெஸ்ட் சராசரி 62.96 ஆக உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த 5வது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித். அவர் 65 டெஸ்ட்களில் ஆடி 25 சதமடித்துள்ளார். 

"நான் எனது கம்பேக்கை கனவு காணவில்லை. நான் சிறுதவறுகளால் அன்பை இழந்தேன். ஆனால் மீண்டும் மீண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

122-8 என்ற நிலையிலிருந்து 284 ரன்கள் என்ற நிலைக்கு அழைத்து வந்தார் ஸ்மித். 

"நான் முதல் சதமடித்த போது அழக்கூடாது என்று நினைத்திருந்தேன். அது எனக்கு சிறந்ததாக அமைந்தது."

"தடையால் நான் சற்று சோர்ந்திருந்தேன். ஆனால், ஆஸ்திரேலிய நாட்டினரின் ஆதரவு எனக்கு அதிகமாக இருந்தது. அது என்னை மீண்டு வர அதிக அளவில் உதவியது" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார் ஸ்மித். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement