"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!

Updated: 14 August 2019 16:43 IST

அவர் மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டியில் அரைசதமடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு அவுட்டான போது விமர்சிக்கப்பட்டார்.

Rishabh Pant Says He Wants To Improve As A Cricketer And Human Being Each Day
இளம் வீரர் ரிஷப் பன்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் கற்றுகொள்ளும் சூழலில் தான் இருக்கிறார். © AFP

இளம் வீரர் ரிஷப் பன்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் கற்றுகொள்ளும் சூழலில் தான் இருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, சிறந்த மனிதனாகவும் கற்றுகொள்வதாக அவர் கூறினார். கிரிக்கெட்டில் தோனியின் செயல்பாடு ஒரு வாழ்க்கை நிகழ்வாகவே உள்ளது. அதனால், பன்ட்டின் பந்து தேர்வு முறை அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்திய அணிக்கு தொடர்ந்து போட்டிகள் உள்ளன. தனக்குத் தேவையான விஷயங்களை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பது பற்றி பன்ட்டிடம் கேட்கப்பட்டது.

"அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமல்ல, எனக்கு எல்லாப் போட்டிகளும் முக்கியமாக போட்டிகள் தான். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது, நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு மனிதராகவும் என்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதை தான் எதிர்நோக்கியுள்ளேன்," என்று பத்திரிகையாளரிடம் பன்ட் கூறினார்.

அவர் மூன்றாவது மட்டும் கடைசி டி20 போட்டியில் அரைசதமடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு அவுட்டான போது விமர்சிக்கப்பட்டார்.

"ஒரு தனிநபராக, களத்துக்குள் செல்லும் போது அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அதில் நான் கவனம் செலுத்துவதில்லை. பாசிட்டிவாக விளையாடினால் என் அணியை எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற செய்ய முடியும்" என்றார் பன்ட்.

அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளித்து, அவர்களுக்கு சரியான வாய்ப்பை அளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பன்ட் கூறினார்.

"அணியில் யார் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எல்லோருக்கும் சரியா வாய்ப்பும், ஆதரவும் கிடைக்கிறது. அணி நிர்வாகம் ஆதரவு அளிப்பதால், அவரவர்களின் ஆடும் இடத்தில் நம்பிக்கை கொண்டு ஆடுகின்றனர்.," என்றார்.

"இங்கு விக்கெட் வீழ்த்துவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. உனக்கான நேரத்தை கொடுத்தால், அதில் செட்டான பிறகு அதிக ரன்கள் எடுக்கலாம்," என்று பன்ட் முடித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
பெயர், நம்பர் பொருத்தப்பட்ட ஜெர்ஸி... டீம் இந்தியா பதிவிட்ட புகைப்படம்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
"கிரிக்கெட்டராக மட்டுமல்ல சிறந்த மனிதராகவும் மேம்பட வேண்டியுள்ளது" - ரிஷப் பன்ட்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
Advertisement