"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!

Updated: 20 July 2019 13:23 IST

"இரு அணிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இல்லாத பொழுதில் இது போன்ற முடிவுகள் நியாயமானதல்ல" என்று மோர்கன் கூறியுள்ளார்.

Eoin Morgan On World Cup Win: "Don
பவுண்டரி முறை படி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டது உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. © AFP

இங்கிலாந்து கேப்டன்  இயான் மோர்கன், உலகக் கோப்பை முடிந்த விதம் அவரை கலங்க வைத்தது என்று அவர் ஒப்புகொண்டார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிய போட்டி இரண்டு முறை டையானது. ஒன்று 50 ஓவர்கள் கொண்ட போட்டி, இன்னொன்று ஒரு சூப்பர் ஓவர். மோர்கன் தலைமையிலான அணி உலகக் கோப்பை போட்டியை பவுண்டரி எண்ணிக்கை வைத்து வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டனர். "இரு அணிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இல்லாத பொழுதில் இது போன்ற முடிவுகள் நியாயமானதல்ல" என்று மோர்கன் கூறியுள்ளார். "ஒரு இடத்தை மட்டும் விளையாட்டில் குறிப்பிட்டு சொல்ல முடியாது: எல்லா இடங்களிலும் போட்டி சமமாக தான் இருந்தது" என்றார்.

இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி வித்தியாசமான முறையில் முடிந்துள்ளது. ஒருநாள் போட்டி, அதுவும் உலகக் கோப்பை போட்டி இப்படியாக முடிந்தது இதுவே முதல்முறை. ஆனால், பவுண்டரி முறை படி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டது உலகம் முழுவதும் இருக்கும் மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், தோல்வியை கையாண்ட விதம் பலராலும் பாராட்டப்பட்டது.

தெளிவான முடிவு எடுப்பதில் வல்லவர் என்று அறியப்பட்டவர் மோர்கன், இங்கிலாந்து அணியின் மாற்றத்துக்கு முக்கிய காரணமாவார். ஆனால் உலகக் கோப்பை இறுதியில் நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ள அவர் சிரமப்படுகிறார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

"நான் கறுப்பு மற்றும் வெள்ளை. நான் சாதாரணமாக இருப்பவர். எனக்கு தெரியும். நான் அங்கு இருக்கும் போது தான் அது நடந்தது. வெற்றி அடைவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், தோற்பது அதை விட கடினமாக ஒன்று" என்றார்.

"எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தை கூறி வெற்றியை கொண்டாட முடியாது: ' ஆனால், இதற்கு நாங்கள் தகுதியானவர்" என்றார்.

"நான் கடந்த இரண்டு நாட்களில் பல முறை கேனிடம் பேசினேன். நாங்கள் இருவரும் போட்டி குறித்து எதுவும் பேசவில்லை. என்னைபோல், எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்" என்றார்.

32 வயதாக மோர்கன், உலகக் கோப்பை போட்டில் சிறப்பானது. "இதுபோன்று எந்த போட்டியும் இவ்வளவு சிறிய வித்தியாசத்தில் வென்றதில்லை. பைத்தியக்காரதனம். இது குறித்து நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"மோர்கன் ஒரு லெஜெண்ட்" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்!
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
கிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்!
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
இங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
Advertisement