''எனக்கு பன்ட் போட்டியில்லை'' மனம் திறந்த இந்திய கீப்பர் சஹா!

Updated: 22 February 2019 14:09 IST

34 வயதான மற்றோரு இந்திய கீப்பரான சஹா தனது போட்டியாளராக ரிஷப் பன்ட்டை பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

Rishabh Pant Is Very Good, But Don
9 டெஸ்ட்களில் ஆடிய பன்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதமடித்து 50க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கிறார். © AFP

ரிஷப் பன்ட் மிக குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். 34 வயதான மற்றோரு இந்திய கீப்பரான சஹா தனது போட்டியாளராக ரிஷப் பன்ட்டை பார்க்கவில்லை என கூறியுள்ளார். சஹா காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்தார். இந்த காலத்தில் இந்திய அணியில் இடம்பெற்ற பன்ட் தன்னை பேட்ஸ்மேன் மற்றும் கீப்பராக சிறப்பாக நிலை நிறுத்திக்கொண்டார். 

இது குறித்த கேள்விக்கு பன்ட்டை "நான் போட்டியாளராக பார்க்கவில்லை. அவரை மட்டுமல்ல நான் சிறுவயதிலிருந்தே யாரையும் போட்டியாக பார்த்ததில்லை" என்றார். "எனது ஒரே எண்ணம் எனது ஆட்டத்தை சிறப்பாக ஆட வேண்டும் என்பது மட்டும்தான்" என்றார். 

பன்ட் குறித்து கூறிய சஹா ''பன்ட் தனது முதல் போட்டியிலிருந்தே தன்னை நிரூபித்து வருகிறார். ஐபிஎல், சர்வதேச போட்டிகளில் அனைத்து வடிவிலான போட்டிகள் என தன்னை நிரூபித்து வருகிறார்.அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது" என்றார்.

சென்ற வருடம் மே 25 நடந்த ஐபிஎல் போட்டியில் காயமடைந்த சஹா, ஆப்கான் தொடரிலிருந்து விலகினார். பின்பு அவருக்கு மான்செஸ்டரில் அறுவை சிகிச்சை செய்யப்படது. 

இந்த இடைவெளியில் பன்ட், இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தார். இதனிடையே 9 டெஸ்ட்களில் ஆடிய பன்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதமடித்து 50க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கிறார்.

மேட்ஸ்மேனாக பன்ட் ஜொலித்தாலும், கீப்பராக சஹாவை விட சிறப்பாக பன்ட் செயல்படவில்லை என்ற விமர்சனமும் பன்ட் மேல் எழுந்துள்ளது. 

கம்பேக் குறித்த கேள்விக்கு பதிலளித்த சஹா, "அதனை தேர்வுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார். நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்" என்றார்.

இந்தியாவின் அடுத்த டெஸ்ட் தொடரில் ஜூலையில் மேற்கிந்திய தீவுகள் அணியோடு மோதவுள்ளது. உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ள சஹா, தோனியின் அனுபவம் அணியை வழிநடத்தும்" என்றார். கோலி தலைமையையும் பாராட்டினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • போட்டியாளராக ரிஷப் பன்ட்டை பார்க்கவில்லை: சஹா
  • சஹா காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருந்தார்
  • பன்ட் தனது முதல் போட்டியிலிருந்தே தன்னை நிரூபித்து வருகிறார்: சஹா
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
காதலி இஷா நேகியுடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிய ரிஷப் பன்ட்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிப்பு!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
Advertisement