"அவரை பாதுகாக்க வேண்டாம்; அவரே அனைவரையும் பாதுகாப்பார்" - தோனி குறித்து ராணுவ தளபதி!

Updated: 26 July 2019 15:41 IST

காஷ்மீரில் நடக்கும் பயிற்சியில், தோனி இடம்பெற்றுள்ளார். இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தோனி பாராசூட் ரெஜிமெட்டில்  இணைந்தார். காஷ்மீரில் நடக்கும் பயிற்சியில், தோனி இடம்பெற்றுள்ளார். இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கலோனலாக உள்ள கிரிக்கெட் வீரர் தோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் தோனி இருக்கும் ராணுவ குழு ரோந்து பணியை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப்படையுடன் தங்கியிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் தோனி ஈடுபட உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ராணுவ தளபதி, பிபின் ரவாத் என்டிடிவியிடம், ராணுவத்தில் அவரின் கடமையை செய்ய நன்கு ஆயுத்தமாகியுள்ளார் தோனி. மற்ற வீரர்கள் போலவே, பாதுகாவலராக தோனி தன்னுடைய பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்றார்.

"ஒரு இந்திய குடிமகனுக்கு ராணுவ உடை அளிக்கப்படும் போது, அதற்கான வேலையில் சிறந்த விளங்க வேண்டிய அவசியம் உள்ளது. தோனி தன்னுடைய முதற்கட்ட பயிற்சியை முடித்து, அவருக்கு கொடுத்திருக்கும் பணியை சரியாக முடிப்பார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றார்.

"தோனி இன்னும் நிறைய பேரை பாதுகாப்பார். ஏனெனில், அவருடன் இன்னும் 106 வீரர்கள் இந்த பணியை செய்யவுள்ளனர். ஏற்கெனவே உள்ள ராணுவ படையினர் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து தோனி பணியாற்றவுள்ளார்."

"நாம் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை, அவர் மக்களை பாதுகாத்து அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக முடிப்பார்," என்று ராணுவ தளபதி கூறினார்.

ராணுவத்தில் பணியாற்ற தோனி, கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாதங்கள் ஓய்வை அறிவித்தார்.

2015ம் ஆண்டில், ஆக்ரா பயிற்சி முகாமில் இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னர் தோனி ஒரு தகுதிவாய்ந்த பார்ட்ரூப்பர் ஆனார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தப் பயிற்சி ஜூலை 31ம் முதல் ஆகஸ்ட் 15ம் வரை நடக்கும்
  • கிரிக்கெட் வீரர் தோனி வரும் 31-ம் தேதி முதல் ரோந்து செல்கிறார்
  • 2015 பயிற்சி முடித்த பின்னர் தோனி ஒரு தகுதிவாய்ந்த பார்ட்ரூப்பர் ஆனார்
தொடர்புடைய கட்டுரைகள்
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“ஒரு புலி இன்னொரு புலியை சந்தித்தால்...” - தோனி ரசிகரின் வைரல் கமெண்ட்!
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
ஆர்.பி. சிங் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு பானி பூரி பரிமாறிய தோனி!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
"ஃபாலோவர்ஸை அதிகரிக்க நீ இதை செய்கிறாய்" - சாக்‌ஷியை ட்ரோல் செய்த தோனி!
Advertisement