''தாமதமாக வராதே'' ஐபிஎல் டீசரில் கோலியை மிரட்டும் தோனி!

Updated: 15 March 2019 19:17 IST

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தொடரின் இரு பெரிய அணிகள் மோதவுள்ளன. கோலி தலைமையிலான ராயல் சேலஞ்ச் பெங்களூரும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் மோதவுள்ளன.

MS Dhoni Warns Virat Kohli In IPL 2019 Teaser
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது. © IPL

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தொடரின் இரு பெரிய அணிகள் மோதவுள்ளன. கோலி தலைமையிலான ராயல் சேலஞ்ச் பெங்களூரும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் மோதவுள்ளன. இதற்கான டிவி விளம்பரம் வைரலாகியுள்ளது. தோனி மற்றும் கோலியின் ரசிகர்கள் தோனி... தோனி... கோலி... கோலி... என முழங்க கடைசியில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்டின் மாடியில் நிற்கும் கோலியும், தோனியும் தேநீர் அருந்துவது போல அந்த விளம்பரம் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. அதில் தோனி கோலியை பார்த்து '' தாமதமாக வராதே'' என மிரட்டலாக கூறி செல்வது போல அந்த வீடியோ முடிகிறது. 

2018ம் ஆண்டு இரண்டாண்டு தடைக்கு பின் களமிறங்கிய தோனி & கோவின் சிஎஸ்கே அணி கோப்பையை வென்று அசத்தியது.

மறுபுறம் விராட் தலைமையிலான ஆர்சிபி இன்னும் ஒரு ஐபிஎல் பட்டத்தை கூட வெல்லவில்லை. ஒவ்வொருமுறையும் தோற்று வெளியேறினாலும், இன்னும் ஐபிஎல் தொடரில் வலிமையான வீரர்களை கொண்ட அணியாகவே இருக்கிறது ஆர்சிபி.

பொதுத்தேர்தல் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  17 ஆட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், இவை எட்டு மைதானங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு வாரத்தில் எல்லா அணிகளும் நான்கு போட்டிகளில் ஆடியிருக்கும். டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மட்டும் 5 போட்டிகளில் ஆடியிருக்கும். 

எல்லா அணிகளும் தனது சொந்த மைதானத்தில் 2 போட்டிகளிலும், மற்ற மைதானங்களில் 2 போட்டிகளிலும் ஆடவுள்ளது. டெல்லி 3 போட்டிகளில் சொந்த மைதானத்திலும், பெங்களூரு 3 போட்டிகளை வெளி மைதானத்திலும் ஆடவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி மற்றும் கோலி சவால் விடுவது போல் டீசர் அமைக்கப்பட்டுள்ளது
  • இரண்டாண்டு தடைக்கு பின் களமிறங்கியது தோனி தலைமையிலான அணி
  • மூன்றாவது முறையாக 2018ம் ஆண்டு ஐபிஎல் பட்டம் வென்றது சிஎஸ்கே
தொடர்புடைய கட்டுரைகள்
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
ராஞ்சியில் வாக்களித்த தோனி... புகைப்படம் பகிரும் ரசிகர்கள்!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
Advertisement