முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் சூப்பர் மேன் கேட்ச்!

Updated: 07 February 2019 12:47 IST

முதலில் பேட் செய்த நியூசிலாந்தின் 15வது ஓவரில் அறிமுக வீரர் டர்யல் மிட்செலை பவுண்டரில் லைனில் பறந்து பந்தை பிடித்து கேட்ச் பிடித்து அசத்தினார் தினேஷ் கார்த்திக்.

Dinesh Karthik
நியூசிலாந்துக்கு எதிரான தினேஷ் கார்த்திக்கின் கேட்ச் இணையத்தில் வைரலானது. © Twitter screengrab/@SanjeevAaspal

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் அனைவரையும் வியக்க வைத்த தருணமாக அமைந்தது தினேஷ் கார்த்திக் பிடித்த அந்த அபாரமான கேட்ச் தான். முதலில் பேட் செய்த நியூசிலாந்தின் 15வது ஓவரில் அறிமுக வீரர் டர்யல் மிட்செலை பவுண்டரில் லைனில் பறந்து பந்தை பிடித்து லைனுக்குள் விழாமல் பந்தை தூக்கி போட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து பந்தை பிடித்து அசத்தினார் தினேஷ் கார்த்திக். இது இணையத்தில் வைரலானது.

முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது இந்தியா. செய்ஃபெர்ட் 84, முன்ரோ மற்றும் வில்லியம்சன் தலா 34 ரன்கள் குவித்ததால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களையும், க்ருணால் பாண்ட்யா, சஹால், புவனேஷ்வர் குமார், கலீல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பியது. தோனி 35, தவான் 29, விஜய் ஷங்கர் 27, க்ருணால் பாண்ட்யா 20 ரன்கள் குவித்தனர், நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், பெர்குசன், சாண்ட்னர், சோதி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஆக்லாந்தில் 8ம் தேதி நடக்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் வைரலானது
  • முதல் டி20 போட்டியை 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா
  • இரண்டாவது டி20 வரும் வெள்ளியன்று நடைபெறுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
அரையிறுதியில் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய நீஷமின் வைரல் கேட்ச்!
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்!!
15 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை போட்டியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக்!!
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
"ரிஷப் பன்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்" - காரணம் சொல்லும் கோலி
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
Advertisement