குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்!

Updated: 04 April 2019 16:55 IST

இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்னே, குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காக வீரர்கள் விதிமுறையை மீறியுள்ளார் என்று 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

Dimuth Karunaratne fined by Sri Lanka Cricket (SLC) for the Drunken Driving incident

இலங்கை டெஸ்ட் கேப்டன் திமுத் கருணரத்னே, குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காக வீரர்கள் விதிமுறையை மீறியுள்ளார் என்று 7500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அபராதம் ஒரு வீரரின் ஒரு போட்டிக்கான தொகைக்கு சமமானது. இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மோகன் டி சில்வா கூறும் போது, "உலகக் கோப்பை போன்ற தொடருக்கு தயாராகும் வீரர், அடுத்து வரும் உள்ளூர் போட்டிகளில் அதிக விலைக்கு ஆடவுள்ள வீரர் இப்படி செய்வது முறையற்றது" என்றார்.

ஞாயிறன்று காலை ஒரு மூன்று சக்கர ஓட்டுநரை தாக்கி காயமடைய வைத்துள்ளார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து பின்னர் விடுவித்துள்ளனர்.

கருணரத்னே கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர்து ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது. பின்னர் ட்விட்டரில் அவர் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

"இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையும்" என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரை வென்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை அணிக்கு அவர் பெயரும் பரிந்துரையில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
பங்களாதேஷுடனான முதல் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுகிறார் மலிங்கா!
உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard
உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான்- இலங்கை போட்டி #Scorecard
அயர்லாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை
அயர்லாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்!
குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய இலங்கை கேப்டனுக்கு அபராதம்!
Advertisement