"ரன்களை திரும்ப பெறும்படி நான் சொல்லவில்லை" - ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து பென் ஸ்ட்ரோக்ஸ்!

Updated: 31 July 2019 16:30 IST

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் பென் ஸ்ட்ரோக்ஸ்.

Ben Stokes Refutes James Anderson
கடைசி ஓவரில், கப்தில் வீசிய பந்து ஸ்ட்ரோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் சேர்ந்தது. © AFP

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஓவர்த்ரோ சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் பென் ஸ்ட்ரோக்ஸ். அந்த ஒரு பந்து தான் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் வெற்றி பெற காரணமாக அமைந்தது. பிபிசியிடம் பேசிய ஸ்ட்ரோக்ஸ், தான் அம்பயரிடம் ஓவர்த் ரோ ரன்களை நீக்கும் படி கேட்கவில்லை என்று கூறியுள்ளார். உலகக் கோப்பையில் இங்கிலாந்து முதல் முறையாக வெற்றி பெற்ற பிறகு பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், அந்த சமயத்தில் ஸ்ட்ரோக்ஸ் மிகவும் வருத்தப்பட்டதாகவும், அம்பயரிடம் ரன்களை திரும்ப பெறும் படி கேட்டதாகவும் கூறினார்.

திங்கட்கிழமை பிபிசியிடம் பேசிய 28 வயதான பென் ஸ்ர் டோக்ஸ், தான் அம்பயரிடம் செல்லவும் இல்லை, கொடுத்த ரன்களை திரும்ப பெற சொல்லவும் இல்லை என்று கூறியுள்ளார்.

"நானே பல முறை சிந்தித்து பார்த்தேன், ஒருவேளை ஆட்டத்தின் பதட்டத்தில் அப்படி ஏதும் கேட்டேனா என்று? ஆனால், மனதில் கை வைத்து சொல்கிறேன் அப்படி நான் சென்று அம்பயரிடம் கேட்கவே இல்லை. நான் ஒரு விஷயம் மட்டும் தான் செய்தேன். டாம் லாதமிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். கேன் வில்லியன்சனை பார்த்து மன்னிப்பு கேட்டேன். ஆனால், அம்பயரிடம் சென்று இந்த ரன்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை," என்றார் ஸ்ட்ரோக்ஸ்.

உலகக் கோப்பை கடைசி போட்டியில் இங்கிலாந்து 242 ரன்கள் இலக்கை நோக்கி ஆடியது. கடைசி ஓவரில், கப்தில் வீசிய பந்து ஸ்ட்ரோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 5 ரன்கள் சேர்ந்தது.

100 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்தது. அதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதுவும் ட்ராவானதால், அதிக பவுண்டரி அடித்த அணியாக இருந்த இங்கிலாந்து வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
"இப்போதிலிருந்து நான்
"இப்போதிலிருந்து நான் 'ஸ்பர்ஸ் அணி' ரசிகர்" - பென் ஸ்டோக்ஸ்!
டெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்!
டெய்லர் ஷிஃப்ட்டை விட பிரபலமான பென் ஸ்டோக்ஸ்!
Advertisement