வலைபயிற்சியில் பேட்டை மாற்றிக்கொண்ட தோனி - கோலி!

Updated: 01 March 2019 18:37 IST

இந்திய முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் கோலியும் பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

MS Dhoni, Virat Kohli Exchange Bats During Net Practice Ahead Of Australia ODIs
இரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது. © AFP

இந்திய முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் கோலியும் பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை ஹைதராபாத்தில் துவங்குகிறது. அதற்காக இந்த அணி பயிற்சி மேற்கொள்ளும் போது, இந்த சம்பவம் நடைபெற்றது. பயிற்சியில் ரோஹித், பும்ரா, ஷமி, பன்ட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய ஆஸ்திரேலிய அணி இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

இரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது. கோலி 38 பந்தில் 72 ரன்களும், தோனி 23 பந்தில் 40 ரன்களும் குவித்தார். 

இந்தியா, ஒருநாள் போட்டியில் அனுபவம் வாய்ந்த அணியாக களமிறங்குகிறது. 

கோலி 222 போட்டிகளில் ஆடி 59.50 சராசரியுடன் ஒருநாள் போட்டிகளில் 10533 ரன்கள் குவித்துள்ளார். தோனி  338 போட்டிகளில் ஆடி 50.80 சராசரியுடன் ஒருநாள் போட்டிகளில் 10415 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த தொடர் இந்தியாவுக்கு உலகக் கோப்பை முந்தைய முன்னோட்டமான தொடராக அமையும் என்று கூறப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • தோனி மற்றும் கோலி பயிற்சியின் போது பேட்களை மாற்றிக்கொண்டனர்
  • இரண்டாவது போட்டியில் கோலி-தோனி இணை 100 ரன்கள் சேர்த்தது
  • தோனி-கோலி இணை டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement