"தோனியை போல் மட்டுமே ஆடுங்கள் தோனி" - சவுரவ் கங்குலி!

Updated: 26 August 2019 23:53 IST

தோனி தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையில் எங்கு இருக்கிறார் என்பதை அவரே மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார் கங்குலி.

MS Dhoni Has To Decide If He Can Still Win Matches For India, Says Sourav Ganguly
எம்.எஸ் தோனி கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாதம் ஓய்வு பெற்றுள்ளார். © AFP

தோனி சர்வதேச போட்டிகளில் ஆடும் எதிர்காலம் குறித்து அதிகபடியான பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. தோனி, இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டார். அதனால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் அவர் இடம்பெறவில்லை. கடைசியாக தோனி இடம்பெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனிக்கு கேப்டனாக இருந்தவர். இந்தியாவுக்காக போட்டிகளில் வெல்ல முடியும் என்று தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

"தோனி தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையில் எங்கு இருக்கிறார் என்பதை அவரே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்திய அணிக்காக போட்டிகளை வெல்ல முடியுமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எம்.எஸ்.தோனி போல் மட்டுமே ஆடுங்கள், வேறு யாரோ போல் அல்ல," என்றார் கங்குலி.

இந்திய அணியில் எதிர்காலத்தில் தோனி இடம்பெறுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத், மேற்கிந்திய தீவுகளுக்கு முன்பாக, தேர்வுக் குழுவினர் தோனிக்கு வழி மட்டுமே காட்ட முடியும் என்று கூறினார்.

தோனி இல்லாத காரணத்தினால், இளம் வீரரான ரிஷப் பன்ட், எல்லா வடிவிலான போட்டிகளுக்கும் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

மூத்த வீரரான தோனி இதுவரை 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 50 சராஶ்ரீயுடன் 10,773 ரன்கள் குவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
"தோனியும், கோலியும் என்னை மதிக்கிறார்கள்" - எம்.எஸ்.கே.பிரசாத்
Advertisement