Listen to the latest songs, only on JioSaavn.com
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20: தோனி மற்றும் பும்ராவுக்கு இடமில்லை!

Updated: 30 August 2019 11:40 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அணியில் தோனி மற்றும் பும்ரா இணைக்கப்படவில்லை.

MS Dhoni, Jasprit Bumrah Not Included In 15-Man India Squad For T20I Series Against South Africa
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அணியில் தோனி இணைக்கப்படவில்லை. © AFP

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான அணியில் தோனி மற்றும் பும்ரா இணைக்கப்படவில்லை. ஓய்வுக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா இந்த அணியில் இணைக்கப்பட்டள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தோனி, கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்று, ராணுவத்தில் பணியாற்ற சென்றிருந்தார். பிடிஐ தகவல்படி, தேர்வுக் குழுவினர், தென்னாப்பிரிக்க தொடருக்கு தோனி பங்கேற்க தயாராக உள்ளாரா என்று உறுதி செய்தார்களா என்பது குறித்து தெரியவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சஹார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வளிக்கப்பட்ட பாண்ட்யா சகோதரர்கள் இப்போது மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், கலீல் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சைனி.

இந்த அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணியை போலவே உள்ளது. அதிக வேலைபளு காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு மட்டும் ஓய்வளிக்கப்படுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் செப்டம்பர் 15, தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி செப்டம்பர் 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
லாக்டவுனில் “புல்லட் காஃபி” தயாரித்து வீடியோ வெளியிட்ட ஜாண்டி ரோட்ஸ்!
லாக்டவுனில் “புல்லட் காஃபி” தயாரித்து வீடியோ வெளியிட்ட ஜாண்டி ரோட்ஸ்!
கொரோனா: கொல்கத்தாவிலிருந்து துபாய்க்குப் புறப்பட்டது தென்னாப்பிரிக்க அணி!
கொரோனா: கொல்கத்தாவிலிருந்து துபாய்க்குப் புறப்பட்டது தென்னாப்பிரிக்க அணி!
வர்ணனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் மஞ்ச்ரேக்கர் செய்த ட்விட்!
வர்ணனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் மஞ்ச்ரேக்கர் செய்த ட்விட்!
கொரோனா அச்சுறுத்தல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டது!
கொரோனா அச்சுறுத்தல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டது!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும்!
Advertisement