ஐபிஎல் 2019: டெல்லி அணியில் இணைகிறார் சவுரவ் கங்குலி!

Updated: 14 March 2019 18:17 IST

டெல்லி இதுவரை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியதில்லை.

Delhi Capitals Rope In Sourav Ganguly As Advisor Ahead Of IPL 2019
கங்குலி, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார். © Twitter

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "வரும் 2019 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி செயல்படுவார்" என்று அறிவித்துள்ளது. டெல்லி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ''வணக்கம் ராயல் பெங்கால் டைகர்'' என கங்குலியை வரவேற்றுள்ளது. 

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அடுத்த நாளில் டெல்லி அணி, மும்பை அணியை சந்திக்கிறது. டெல்லி இதுவரை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியதில்லை. 

கங்குலி, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார். 2012 வரை கொல்கத்தாவுக்காக ஆடினார் கங்குலி.

ஐபிஎல் தொடரின் சற்று பிந்தங்கிய அணியாக பார்க்கப்படும் டெல்லி, இந்த முறை புதுமுகங்களுடன் களமிறங்குகிறது.

இந்த சீசனில் கங்குலி மற்றும் கைஃப், பாண்டிங்குடன் பேட்டிங் ஆலோசகர்களாக இணையவுள்ளனர்.

கடந்த மாதம் டெல்லி கேப்பிட்டலின் ஜெர்ஸி அறிமுகத்தில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார் கங்குலி
  • டெல்லி கேப்பிட்டல்ஸ், முதல் போட்டியை மார்ச் 24ம் தேதி துவங்குகிறது
  • 2012 வரை கொல்கத்தாவுக்காக ஆடினார் கங்குலி
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்டுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கும் ஸிவா தோனி!
ரிஷப் பன்டுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கும் ஸிவா தோனி!
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
"சிறந்த கேப்டனாக மாற கோலி, தோனி, ரோஹித்தான் காரணம்": ஷ்ரேயாஸ்
"சிறந்த கேப்டனாக மாற கோலி, தோனி, ரோஹித்தான் காரணம்": ஷ்ரேயாஸ்
சி.எஸ்.கே லிவர்பூல் போல டெல்லிக்கு எதிராக ஆட வேண்டும்: விவ் ரிச்சர்ட்ஸ்
சி.எஸ்.கே லிவர்பூல் போல டெல்லிக்கு எதிராக ஆட வேண்டும்: விவ் ரிச்சர்ட்ஸ்
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
Advertisement