"ஆழந்த வருத்தத்தை தருகிறது" - சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு கிரிக்கெட் வீரர்களின் ட்விட்!

Updated: 07 August 2019 16:09 IST

விராட் கோலி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

"Deeply Saddened": Virat Kohli Pays Tribute To Sushma Swaraj
விராட் கோலி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். © AFP

விராட் கோலி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். "சுஷ்மா ஜி உயிரிழந்தது ஆழ்ந்த மன வருத்தத்தை அளிக்கிறது, அவருடைய ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்," என்று விராட் கோலி ட்விட் செய்தார். 67 வயதான சுஷ்மாவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் வருத்தத்தையும், இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர், அவருடன் பேசிய, அவரை சந்தித்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். மற்ற விளையாட்டு வீரர்களான கவுதம் கம்பீர், வீரேந்திர சேவாக், சானியா மிர்ஸா என பலரும் ட்விட் செய்து வருகின்றனர்.

"சுஷ்மா சுவராஜ் காலமானதில் நான் வேதனையடைகிறேன். ஒரு மூத்த அரசியல்வாதியும் பாஜகவின் தூணுமான அவர் அனைவராலும் விரும்பப்பட்டார். சமீபத்திய காலங்களில் மிகவும் அன்பான மற்றும் உதவி செய்யக்கூடிய அரசியல்வாதிகள் என்று அவர் நினைவுகூரப்படுவார். அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவுக்கு இது பேரிழப்பு," என்று கிரிக்கெட்டிலிருந்து அரசியலுக்கு சென்ற கவுதம் கம்பீர் ட்விட் செய்துள்ளார்.

"சுஷ்மா சுவராஜ் ஜியின் குடும்பத்தாருக்கும், அவரின் ரசிகர்களுக்கும் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்," முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் பதிவிட்டுள்ளார்.

"என் அன்பான சுஷ்மா சுவராஜ் ஜி காலமானதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் 'பெண் குழந்தை' பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பணியாற்றியதை மரியாதையாக கருதுகிறேன் மற்றும் அவருடனான எனது தனிப்பட்ட உறவை என்றென்றும் சந்தோஷமாக கொண்டாடுவேன். R.I.P. ma'am," டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ட்விட் செய்தார்.

"எனக்கு பிடித்த அரசியல்வாதிகளில் ஒருவர். பாராட்ட நிறைய உள்ளது. மனமார்ந்த இரங்கல். பெரும் இழப்பு. நிம்மதியாக ஓய்வெடுங்கள்" என்று வர்ணனையாளராக மாறிய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறினார்.

"இங்கே மேற்கிந்தியத் தீவுகளில், #சுஷ்மாசுவராஜ் ஜி காலமானார் என்ற வருத்தமான செய்தியைக் கேட்டேன். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், மிக விரைவில் சென்றுவிட்டீர்கள்," என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிஃப் கூறினார். இவர் இப்போது மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் வர்ணனையாளராக உள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் #ScoreCard
India vs Bangladesh: முதல் டெஸ்ட் இரண்டாவது நாள் #ScoreCard
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"என்னை அல்ல முகமது ஷமியை உற்சாகப்படுத்துங்கள்" - இண்டோர் ரசிகளிடம் சொன்ன கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ரசிகர்களின் இதயத்தை வென்ற அனுஷ்கா ஷர்மா பதிவிட்ட கோலியின் புகைப்படம்!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
ஓய்வுக்கு பிறகு தான் கற்றுக்கொள்ள நினைப்பது குறித்து பேசினார் கோலி!
Advertisement