இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!

Updated: 14 February 2019 14:50 IST

முன்னதாக 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அனுஜ் தேடா தேர்வு செய்யப்படாததால் டெல்லி கிரிக்கெட் சங்க சேர்மன் அமித் பண்டாரியை தாக்கினார்

DDCA To Increase Security During Trials After Assault On Amit Bhandari
பண்டாரியை இரும்பு கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் அவர்கள் தாக்கியுள்ளனர். © AFP

டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு சேர்மன் அமித் பண்டாரி தாக்கப்பட்டதையடுத்து கிரிக்கெட் சங்க தலைவர் ராஜ்த் ஷர்மா அணி தேர்வின் போது பாதுகாப்பு காரணிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  அணி தேர்வின்போது வீரர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் உள்ளூர் காவல்துறை பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். 

"எங்கள் தேர்வுக்குழுவினர் பாதுகாப்புதான் பிரதானம். மைதானத்துக்குள் தேர்வுக்கு அழைக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுமதியில்லை" என்றார். 

மேலும் அணி தேர்வின் போது உள்ளூர் போலீஸை அணுகி அவர்களின் பாதுகாப்பை பெற இருப்பதாகவும் ராஜத் ஷர்மா தெரிவித்துள்ளார். 

முன்னதாக 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அனுஜ் தேடா தேர்வு செய்யப்படாததால் டெல்லி கிரிக்கெட் சங்க சேர்மன் அமித் பண்டாரியை தாக்கினார். இந்த காரணத்துக்காக அனுஜ் தேடாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜத் ஷர்மா அறிவித்தார்.

அமித் பாண்டாரியை தாக்கியதற்காக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவருக்கு ஆயுள்தடை வழங்க முடிவெடுக்கப்பட்டது என்றார் ராஜத் ஷர்மா.

பண்டாரி 10-15 பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டார். டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். 23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வை நியாயமான முறையில் நடத்தவிடாமல் அவர்கள் தடுத்துள்ளனர்.

பண்டாரியை இரும்பு கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் அவர்கள் தாக்கியுள்ளனர். அவரோடு இருந்த அவரது சக பயிற்சியாளர் சுக்விந்தர் சிங் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். போலீஸ் தகவலறிந்து வருவதற்கு முன்னாள் தாக்குதல் நடத்தியவர்கள் ஓடிவிட்டனர்.

பண்டாரிக்கு தலை மற்றும் கால்களில் 7 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • அனுஜ் தேடாவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • அனுஜ் தேடா தேர்வு செய்யப்படாததால் அமித் பண்டாரியை தாக்கினார்
  • பண்டாரிக்கு தலை மற்றும் கால்களில் 7 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
Advertisement