Listen to the latest songs, only on JioSaavn.com
 

''பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான்'' - பான்க்ராஃப்ட்

Updated: 26 December 2018 13:56 IST

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக காம்ரோன் பான்க்ராஃப்ட்க்கு 9 மாத தண்டனை விதிக்கப்பட்டது.

David Warner Was The Mastermind Of Ball-Tampering Plot, Confirms Cameron Bancroft
பான்க்ராஃபிடின் தண்டனைக்காலம் முடிவடைந்ததால் வரும் ஞாயிரன்று பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிக்காக களமிற‌ங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. © AFP

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக காம்ரோன் பான்க்ராஃப்ட்க்கு 9 மாத தண்டனை விதிக்கப்பட்டது.  கடந்த புதனன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னாப்பிரிக்காவில் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை மாற்றச் சொன்னது டேவிட் வார்னர் தான்" என்று கூறியுள்ளார். "வார்னர் சொன்னதால் தான் நான் பந்தை சூழலுக்கு ஏற்ப சேதமாக்கினேன். எனக்கு எதுவும் தெரியாது" என்றார். 

"நான் ஃபிட்டாகவும், தொடர்ந்து விளையாடவும் தான் விரும்பினேன். எனக்கு இந்த தவறுக்கு ஏற்ற தண்டனை கிடைத்துவிட்டது" என்று நினைக்கிறேன். "ஆனாலும் சில நேரங்களில் இது நான் செய்த தவறுக்கு அதிகமான தண்டனை" என்று நினைப்பேன்.

இந்த தவற்றில் ஈடுபட்ட வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது. பான்க்ராஃப்ட் தான் நிரபராதி என்று பலமுறை கூறினாலும் அவரும் தவறில் ஈடுபட்ட குற்றத்துக்காக 9 மாதம் தடைவிதிக்கப்பட்டார்.

சென்ற வாரம் ஸ்மித் தான் சரியான தலைமைப்பண்பை வெளிப்படுத்தவில்லை என்று கூறினார். ஸ்மித் வார்னரின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அவரும் இந்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். 

பான்க்ராஃபிடின் தண்டனைக்காலம் முடிவடைந்ததால் வரும் ஞாயிரன்று பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிக்காக பிக்பேஷ் லீக்கில் களமிற‌ங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
தன்னை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு வார்னரின் புத்திசாலித்தனமான பதில்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
தடைக்கு பின் ஆஷஸ் தொடரில் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட்!
சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினோம் - பனேசார்
சன்ஸ்க்ரீன் லோஷன் மற்றும் உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினோம் - பனேசார்
கிரிக்கெட் தடை என்னை மனிதனாக்கியது - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!
''கிரிக்கெட் தடை என்னை மனிதனாக்கியது'' - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!
பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான் - பான்க்ராஃப்ட்
''பந்தை சேதப்படுத்த சொன்னது வார்னர் தான்'' - பான்க்ராஃப்ட்
Advertisement