வார்னரை உப்புத்தாளை வைத்து வம்பிழுத்த இங்கிலாந்து ரசிகர்கள்!

Updated: 02 August 2019 09:40 IST

வார்னர் அவுட் ஆகி வெளியேறும் போது மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் உப்புத்தாளை காட்டி வழியனுப்பினர்.

David Warner Gets
துவக்க ஓவர்களை ஆன்டர்சனும், ப்ராடும் வீசினர். அவர்கள் பேட்ஸ்மேனை திணறடிக்கும் விதமாக வீசினர். © Twitter

ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே முக்கியமான தொடராக பார்க்கப்படும் ஆஷஸ் தொடர் எட்பாஸ்டனில் துவங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். டேவிட் வார்னர் மற்றும் பான்க்ராஃப்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்க ஓவர்களை ஆன்டர்சனும், ப்ராடும் வீசினர். அவர்கள் பேட்ஸ்மேனை திணறடிக்கும் விதமாக வீசினர்.  துவக்க வீரர்களை ப்ராட் அபாரமாக பந்து வீசி அவுட் ஆக்கினார். வார்னர் 2 ரன்களில் ப்ராட் பந்தில் வெளியேறினார்.

வார்னர் அவுட் ஆகி வெளியேறும் போது மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் உப்புத்தாளை காட்டி வழியனுப்பினர்.

2018 தென்னாப்பிரிக்க தொடரில் பந்தை உப்புத்தாள் கொண்டு சேதப்படுத்தியதற்காக மூன்று வீரர்களுக்கு ஒராண்டு தடை விதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

முதல் நாளில் வார்னர், பான்க்ராஃப்ட் என இருவருமே அந்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு அணிக்கு திரும்பியவர்கள். அவர்களை முதல் நாளிலேயே ப்ராட் வெளியேற்றினார்.

ஆஸ்திரேலியா தற்போது ஆஷஸ் கோப்பையை வைத்திருந்தாலும், 2001க்கு பிறகு இங்கிலாந்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை. அதேபோல இங்கிலாந்து எட்பாஸ்டனில் கடைசியாக ஆடிய 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததே இல்லை. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
போட்டிக்கு முன் சிறு வயது விளையாட்டில் ஈடுபட்ட டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ்
போட்டிக்கு முன் சிறு வயது விளையாட்டில் ஈடுபட்ட டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
Advertisement