இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் யார் யாருக்கு இடம்?

Updated: 17 August 2019 17:19 IST

டரென் பிராவோ மற்றும் ஜான் கேம்ப்பெல் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் இவர்கள், மேற்கிந்திய தீவுகள் ஏ அணி இந்தியாவுக்கு எதிரான மூன்று நாள் சுற்றுப்பயண அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

Darren Bravo, John Campbell Included In West Indies A Squad For Tour Game vs India
பிராவோ மற்றும் கேம்ப்பெல் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். © AFP

டரென் பிராவோ மற்றும் ஜான் கேம்ப்பெல் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் இவர்கள், மேற்கிந்திய தீவுகள் ஏ அணி இந்தியாவுக்கு எதிரான மூன்று நாள் சுற்றுப்பயண அணியிலும் இடம்பெற்றுள்ளனர். பிராவோ மற்றும் கேம்ப்பெல் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். இவர்கள் இருவருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக இந்த போட்டியில் ஆடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும். டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் வென்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அடுத்து ஆடவுள்ள டெஸ்ட் போட்டிகள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆனால், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஏனெனில் விராட் கோலி அனியில் பும்ரா, புஜாரா மற்று ராஹானே ஆகிய சிறப்பிமிக்க வீரர்களை வைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணியை ஜாஹ்மர் ஹாமில்டன்  கேப்டனாக உள்ளார். மற்ற முக்கிய வீரர்களாக ஜெரிமி சோலோஸனோ, அகிம் ஃப்ராசெர் மற்றும் ரொமாரியோ ஷெபர்ட் ஆகிய வீரர்கள் கடந்த மாதம் இந்திய ஏ அணிக்கு எதிராக ஆடினர்.

இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணி:

ஜாஹ்மர் ஹாமில்டன் (கேப்டன்), டரென் பிராவோ மற்றும் ஜான் கேம்ப்பெல், ஜொனாதன் கார்டர், அகிம் ஃப்ராசெர், கியோன் ஹார்டிங், காவெம் ஹோட்ஜ், ப்ராண்டன் கிங், ஜாஸன் முகமது, மார்கினோ மிண்ட்லே, காரே பிர்ரி, ரோவ்மேன் போவெல், ரொமாரியோ ஷெபர்ட் மற்றும் ஜெரிமி சோலோஸனோ

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்!
கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்!
India vs West Indies 3rd ODI: நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
India vs West Indies 3rd ODI: நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
16 பச்சை குத்தல்களைக் கொண்ட விராட் கோலியின் ரசிகர்! 
16 பச்சை குத்தல்களைக் கொண்ட விராட் கோலியின் ரசிகர்! 
பொல்லார்டுடன் புகைப்படம்... சாஹலை ட்ரோல் செய்த  விராட் கோலி!
பொல்லார்டுடன் புகைப்படம்... சாஹலை ட்ரோல் செய்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
Advertisement