தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகல்!

Updated: 04 June 2019 17:31 IST

தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Dale Steyn Ruled Out Of World Cup 2019 Due To Shoulder Injury
இவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெரான் ஹென்ட்ரிக்கஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். © AFP

தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக கூறப்பட்டுள்ளது. ஐசிசி தகவலின் படி சிகிச்சை மூலம் உலகக் கோப்பை தொடருக்குள் அணிக்கு திரும்புவது கடினம் என்பதால் ஸ்டெயின் விலகுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெரான் ஹென்ட்ரிக்கஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் 2019 தொடரின் போது ஆர்சிபி அணிக்காக இரண்டு போட்டிகளில் ஆடி காயம் காரணமாக வெளியேறினார் ஸ்டெயின். 

ஐசிசி, ஸ்டெயின் தொடரிலிருந்து விலகுவதை உறுதி செய்துள்ளது. இவர் விலகுவதால் தென்னாப்பிரிக்க அணியில் மாற்று வீரராக பெரான் ஹென்ட்ரிக்கஸ்  இடம்பெறுவார் என்று தெரிவித்துள்ளது ஐசிசி. 

இரண்டாவது தோள்பட்டை காயத்தால் அவதிக்குளாகியுள்ள ஸ்டெயினுக்கு சிகிச்சை அளித்து நடப்பு தொடரில் பங்கேற்க வைப்பது சாத்தியமில்லை என்பதால் மாற்று வீரரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டெயின் வலையில் சில பந்துகளை ஆம்லாவுக்கு வீசினார். இருந்தாலும் காயத்தின் தன்மையை ஆராய்ந்து அவர் விலகுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த காயம் ஸ்டெயினின் உலகக் கோப்பை பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டெயினுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பிக் பாஷ் லீக்: ஜேக் வீதரால்ட்டை வெளியேற்றிய டேல் ஸ்டெய்ன்!
பிக் பாஷ் லீக்: ஜேக் வீதரால்ட்டை வெளியேற்றிய டேல் ஸ்டெய்ன்!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
Advertisement