"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!

Updated: 15 August 2019 13:01 IST

இந்திய சுற்றுப்பயணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் டி20 அணி அறிவிக்கப்பட்டது. அதில் டெல் ஸ்டெயினின் பெயர் இடம்பெறவில்லை.

Dale Steyn Not "Medically Ready" To Be Part Of India Series, Says CSA
டெல் ஸ்டெயின் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அறிவித்தார். © AFP

இந்திய சுற்றுப்பயணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் டி20 அணி அறிவிக்கப்பட்டது. அதில் டெல் ஸ்டெயினின் பெயர் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்பொது, டெல் ஸ்டெயின் உடல் அளவில் பொருத்தமாக இல்லை என்று அறிக்கை கொடுக்கப்பட்டது. அதனால் தான் அவர் டி20 அணியில் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளது. "அவர் இன்னும் மருத்துவ ரீதியாக தயாராக இல்லை, எங்கள் தகவல்கள்  தெளிவுபடுத்துகின்றன" என்று சிஎஸ்ஏ இயக்குநர் கொர்ரி வான் ஸைல் கூறினார். வெர்னான் பிலாந்தர் மற்றும் தியூனிஸ் டி ப்ரூன் ஆகியோர் அக்டோபரில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார்கள் என்றார்.

"தொடருக்கு முன்பாக அவர்கள் இருவரும் ஒரு போட்டியில் ஆட வேண்டும். அதன்பின்னரே டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார்கள்" என்றார்.

அணியை அறிவித்த தேர்வுக்குழுவினரும் ஸ்டெயின் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒரு ட்விட்டுக்கு பதிலளித்த ஸ்டெயின் தான் அணி தேர்வின் போது தயார் நிலையில் இருந்ததாக தெரிவித்தார். "நான் தயாராக இருந்தேன்... தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்." என்று ஸ்டெயின் ட்விட் செய்தார்.

நெயில் மன்த்ரோப் என்பவர் ட்விட்டரில், "புது தேர்வாளர்கள் உங்களை "பெரிய" போட்டிகளுக்காக காக்க வைத்திருக்கிறார்கள்" என்று ட்விட் செய்தார்.

அதிலிருக்கும் உள்ளர்த்தம் புரியாத ஸ்டெயின், "நான் தயாராக இருந்தேன்... தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்." என்று பதிலளித்தார்.

நெயில் மன்த்ரோப், 'பெரிய' போட்டிகள் என்று கூறியது, இந்திய அணியை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்பது போல் பதிவானது. அதனால், ஸ்டெயின் விராட் கோலியிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டு ஸ்டெயின் ட்விட்டரில், "அவர்கள் இல்லை என்று நினைக்கும் விராட் கோலி மற்றும் பில்லியன் மக்களிடம் என்னுடைய மன்னிப்பை கேட்டுகொள்கிறேன்" என்றார்.

"நான் அதிகம் விரும்பும் போட்டியான டெஸ்ட்டிலிருந்து நான் விடைபெறுகிறேன்," என்றார் 36 வயதான ஸ்டெயின், நியூசிலாந்து அணியின் முன்னணி விக்கெட் டேக்கர் மற்றும் டாப் 10 முன்னணியில் இருப்பவர்.

"மீண்டும் ஒருபோதும் மற்றொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று கருதுவது கடினமாக உள்ளாது, ஆனால் இதைவிட பயங்கரமான விஷயம் என்னவென்றால், மீண்டும் ஒருபோதும் விளையாடக்கூடாது என்ற எண்ணம். அதனால், நான் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் கவனம் செலுத்தி, என்னால் சாத்தியமானவற்றை கிரிக்கெட்டுக்காக செய்வேன்" என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
"இதனால் தான் ஸ்டெயினுக்கு அணியில் இடமில்லை" - விளக்கமளித்த சிஎஸ்ஏ!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
ட்விட்டரில் ஏற்பட்ட குழப்பம்... விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
"டெஸ்ட் போட்டிகளில் இனி ஆடப்போவதில்லை" - ஓய்வை அறிவித்த டேல் ஸ்டெயின்!
தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகல்!
தோள்பட்டை காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து ஸ்டெயின் விலகல்!
Advertisement