தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!

Updated: 09 November 2019 15:15 IST

‘The King, at your service’ என அந்த புகைப்படத்திற்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

CSK treats fans with a Dhoni photo
Dhoni: கடைசியாக 2019 உலகக்கோப்பையில் தோனி விளையாடினார்

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் இன்றியமையாதவராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. உலகக்கோப்பை 2019 க்கு பின் கிரிக்கெட்டில் இருந்தி சில காலம் விலகியுள்ளார் தோனி. தென் ஆப்ரிக்கா, பங்களாதேஷ் தொடர்கள் அறிவித்த போது அனைவரது கேள்வியும் ஒன்று தான். தோனி எங்கே? என்பது தான்.

இதுவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்காத தோனி, இந்தியா அணிக்கு எப்போது கம்-பேக் கொடுப்பார் என அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் அவ்வபோது தோனியை குறித்து சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணியுடன் இந்தியா அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போது வீரர்களுடன் தோனி கலந்துரையாடினார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இண்ஸ்டாகிராமில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் தோனி டென்னிஸ் விளையாடுவது போல் புகைப்படம் உள்ளது. ‘The King, at your service' என அந்த புகைப்படத்திற்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டென்னிஸ் பேட் உடன் இருக்கும் தோனி மறுபடியும் தனது ஆயுதமான கிரிக்கெட் பேட்டை எப்போது எடுப்பார் என்பதே கோடிக்கணக்கான மக்களின் கேள்வியும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
IPL 2020: "காட்டின் ராணி" சாக்‌ஷி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிஎஸ்கே!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"அணியில் இணைகிறாரா தோனி?" - வைரலாகும் பயிற்சி வீடியோ
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
Advertisement