தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!

Updated: 13 September 2019 16:59 IST

தோனி ஓய்வு குறித்தான செய்திகள் பரவ தொடங்கின. சாக்‌ஷி தன்னுடைய ட்விட்டில், "இதை வதந்திகள் என்பார்கள்" என்று பதிவு செய்தார்.

MS Dhoni Retirement Rumours: CSK Shut Down Speculations With Iconic Game Of Thrones Dialogue
சி.எஸ்.கே 'கேம் ஆப் த்ரோன்ஸ்' கதாபாத்திரம் ஆர்யா ஸ்டார்க்கின் புத்தகத்தின் ஒரு யூகத்தை ட்விட்டரில் திணித்தது. © AFP

தோனி ஓய்வு பெற போகிறார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரின் மனைவி சாக்‌ஷி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மூன்று வார்த்தைகளுடன் ட்விட் செய்துள்ளார். வியாழக்கிழமை விராட் கோலி, 2016ம் ஆண்டு தொடரின் புகைப்படத்தை பகிர்ந்ததற்கு பிறகு, தோனி ஓய்வு குறித்தான செய்திகள் பரவ தொடங்கின. சாக்‌ஷி தன்னுடைய ட்விட்டில், "இதை வதந்திகள் என்பார்கள்" என்று பதிவு செய்தார். இந்த ட்விட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மை தன்மை நிறைந்த தகவலாக கிடைத்துள்ளது.

தோனியின் ஓய்வு குறித்தான செய்திகள் பரவி வந்த நிலையில், சி.எஸ்.கே 'கேம் ஆப் த்ரோன்ஸ்' கதாபாத்திரம் ஆர்யா ஸ்டார்க்கின் புத்தகத்தின் ஒரு யூகத்தை ட்விட்டரில் திணித்தது. தோனியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், சிஎஸ்கே "Not 7oday" என்று பதிவிட்டது. இதில் 7 தோனியின் ஜெர்ஸி நம்பரை குறிக்கும்.

இந்த ட்விட்டை பார்த்த சில ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இன்னும் சிலர் சிஎஸ்கேவின் வித்தியாசமான யோசனையை பாராட்டினர்.

தேர்வுக் குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத், தோனியின் ஓய்வு செய்திகள் உண்மையல்ல, அது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றார். "தோனியின் ஓய்வு குறித்து எந்த புது தகவலும் இல்லை, அந்தச் செய்தி பொய்யானது," என்று எம் எஸ் கே பிரசாத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவிக்கும் போது தெரிவித்தார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பின்னர் தோனி கிரிக்கெட்டிலிருந்து 2 மாதங்கள் ஓய்வு அறிவித்து, ராணுவத்தில் பணியாற்றச் சென்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. மேலும், தென்னாப்பிரிக்காவுடன் ஆடவிருக்கும் டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

தோனி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் 2019 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக டி20 விளையாடினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
"இந்திய அணியில் தோனி தன்னை திணித்துகொள்ள மாட்டார்" - ரவி சாஸ்திரி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
Advertisement