ஐபிஎல் சீஸன் 12 : மூன்று வீரர்களை நீக்கியது சி.எஸ்.கே!

Updated: 15 November 2018 14:04 IST

ஐபிஎல் தொடரின் 12வது சீஸன் துவங்கவுள்ளது. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.  அணியிலிருந்து மூன்று வீரர்களை விடுவிப்பதாகவும், 22 வீரர்களை அணியில் தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Indian Premier League 2019: Chennai Super Kings Release Three Players, Retain Core Group
மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. © File Photo/AFP

ஐபிஎல் தொடரின் 12வது சீஸன் துவங்கவுள்ளது. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.  அணியிலிருந்து மூன்று வீரர்களை விடுவிப்பதாகவும், 22 வீரர்களை அணியில் தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 

இதன்படி சென்ற தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் மற்றும் இந்தியா உள்ளூர் வீரர்கள் கேஷிட்ஸ் ஷர்மா மற்ரும் செத் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.  போன சீஸனில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக இடம்பெற்ற டேவிட் வில்லே உள்ளிட்ட 22 வீரர்கள் அணியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லா ஐபிஎல் அணிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் அணி விவரத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி நீக்கியுள்ளது. இதனை அவருக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக அறிவித்துள்ளதாக அவர் 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' செய்தியில் குறிப்பிட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் ஸ்டார்க் போன சீஸனில் 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டவர். இந்த ஓய்வு அவருக்கு அடுத்த ஆறுமாதத்தில் வரவுள்ள உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய கேப்டன் கோலியும், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை ஐபிஎல் போட்டிகளை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

(With IANS inputs)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Advertisement