கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!!

Updated: 25 June 2019 16:33 IST

மும்பைக்கு அவர் வந்துள்ள நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் லாரா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Brian Lara Admitted To Hospital In Mumbai After Complaining Of Chest Pain
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் வர்ணனையாளராக லாரா இருந்து வருகிறார். © AFP

பிரபல கிரிக்கெட் வீரரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடல்நிலை நிலவரம் குறித்து குளோபல் மருத்துவமனை விரைவில் அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்த லாரா, தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் வர்ணனையாளராக இருந்து வருகிறார். 
 
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும், லாராவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். சச்சினைப் பார்ப்பதற்கு லாரா அடிக்கடி மும்பைக்கு வருவார். முன்னதாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்போது வல்லுனர் குழுவில் லாரா இடம்பெற்றிருந்தார். 

டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தவர் என்ற சாதனையை லாரா படைத்திருக்கிறார். 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய லாரா, 10,405 ரன்களை குவித்துள்ளார். சராசரி ரன் 40.48.

இதேபோன்று 131 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்காக விளையாடி 12 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். லாராவின் டெஸ்ட் சராசரி 52.89 ரன்களாகும். 

Comments
ஹைலைட்ஸ்
  • பிரையன் லாராவும் சச்சின் டெண்டுல்கரும் நெருங்கிய நண்பர்கள்
  • தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வர்ணனையாளராக லாரா உள்ளார்
  • லாரா உடல் நிலை குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
கிரிக்கெட் களத்தில் மீண்டும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா!
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரையன் லாராவின் உருக்கமான மெஸேஜ்!
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரையன் லாராவின் உருக்கமான மெஸேஜ்!
கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!!
கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!!
சச்சின், லாரா ரெண்டு பேரும் சாதனையும் ‘க்ளோஸ்’… கெத்துகாட்டும் கிங் கோலி!
சச்சின், லாரா ரெண்டு பேரும் சாதனையும் ‘க்ளோஸ்’… கெத்துகாட்டும் கிங் கோலி!
Advertisement