2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights

Updated: 08 February 2019 14:54 IST

இந்தியா vs நியூசிலாந்து டி20 போட்டி: தொடரை நிர்னயிக்கும் கடைசி டி20 போட்டில் ஹாமில்டனில் 10ம் தேதி நடைபெறுகிறது.

Live Cricket Score, IND vs NZ 2nd T20I, India vs New Zealand Live Match Updates: New Zealand Win Toss, Opt to Bat at Eden Park
இந்தியா மற்றும் நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. © Twitter

இந்தியா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. தற்போது 0-1 என்று பின் தங்கியுள்ள இந்தியா 2வது போட்டியில் ஆக்லாந்தில் இன்று மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சென்ற போட்டியில் ஆடிய அதே அணியே இந்த போட்டியிலும் ஆடுகிறது. சென்ற போட்டிகளில் நடந்த தவ்றை இந்த போட்டியில் திருத்திக் கொண்டு களமிறங்குவதாக கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

அணி விவரம்:

நியூசிலாந்து: முன்ரோ, டிம் செய்ஃபெர்ட், வில்லியம்சன், ராஸ் டெய்லர், டர்யல் மிட்செல், க்ராண்ட்ஹோம், சாண்டனர், ஸ்காட் குகெலிஜின், சவுத்தி, சோதி, பெர்குசன்.

இந்தியா: தவான், ரோஹித், பன்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சஹால், கலீல் அகமது.

ஓவர் 1:

டாஸ் வென்ற நியூசிலாந்தின் செய்ஃபெர்ட் மற்றும் முன்ரோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.

ஓவர் 2:

கலீல் அகமது வீசிய 2வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. முதல் 12 பந்துகளில் பவுண்டரி அடிக்கவில்லை.

ஓவர் 3:

3வது ஓவரை வீசினார் புவனேஷ்வர் குமார் . அதில் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்த செய்ஃபெர்ட் மூன்றாவது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர்தான் சென்ற போட்டியில் 43 பந்தில் 84 ரன் குவித்து இந்தியாவை திணறடித்தார். 3வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.

ஓவர் 4:

கலீல் அகமது வீசிய நான்காவது ஓவரில் நியூசிலாந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் 13 ரன்கள் குவித்தது.4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 5:

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஐந்தாவது ஓவரில் நியூசிலாந்து 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் குவித்தது. 5 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 6:

க்ருணால் பாண்ட்யா வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் நியூசிலாந்து துவக்க வீரர் முன்ரோ மற்றும் மிட்செல் விக்கெட்டை இழந்து 3 ரன்கள் எடுத்தது. பவர்ப்ளேயில் 6 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. முன்ரோ க்ருணால் பாண்ட்யா பந்தில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் க்ருணால் பாண்ட்யா.

ஓவர் 7:

சஹால் வீசிய ஓவரில் நியூசிலாந்து 5 ரன்களை எடுத்தது. 7 ஓவர் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக சென்ற ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் எல்பிடபள்யூ ஆனது சர்ச்சையாகியுள்ளது. டிவி ரீப்ளேயில் பேட்டில் பந்து பட்டது தெரிந்தும் கள நடுவர் மற்றும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

ஓவர் 8:

க்ருணால் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 3 ரன்களை எடுத்து வில்லியம்சன் விக்கெட்டை இழந்தது. 8 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் எல்பிடபள்யூ ஆகி வெளியேறினார். இரண்டு ஓவர்கள் வீசியுள்ள க்ருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஓவர் 9:

சஹால் வீசிய ஓவரில் நியூசிலாந்து 5 ரன்களை எடுத்தது. 9 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 10:

க்ருணால் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 4 ரன்களை எடுத்தது. ஆட்டத்தின் பாதியில் 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 11:

சஹால் வீசிய ஓவரில் நியூசிலாந்து இரண்டு சிக்சர்களுடன் 19 ரன்களை எடுத்தது. 11 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 12:

க்ருணால் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து இரண்டு சிக்சர்களுடன் 18 ரன்களை எடுத்தது. 12 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 13:

சஹால் வீசிய ஓவரில் நியூசிலாந்து 8 ரன்களை எடுத்தது. 13 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 14:

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 9 ரன்களை எடுத்தது. 14 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. க்ராண்ட்ஹோம் 21 பந்தில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ஓவர் 15:

கலீல் அகமது வீசிய ஓவரில் நியூசிலாந்து 7 ரன்களை எடுத்தது. 15 ஓவர் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 16:

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 8 ரன்களை எடுத்தது. இந்த ஓவரின் 3வது பந்தில் அரைசதமடித்த க்ராண்ட்ஹோம், 4வது பந்தில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 16  ஓவர் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 17:

புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரில் நியூசிலாந்து 7 ரன்களை எடுத்தது. 17 ஓவர் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 18:

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 9 ரன்களை எடுத்தது. 18 ஓவர் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஓவர் 19:

ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவரில் நியூசிலாந்து 8 ரன்களை எடுத்தது. 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. ராஸ் டெய்லர் 42 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் ஷங்கரால் பவுண்டரி லைனில் இருந்து எரியப்பட்ட பந்தில் ரன் அவுட் ஆனார்.

ஓவர் 20:

கலீல் அகமது வீசிய ஓவரில் நியூசிலாந்து 5 ரன்களை எடுத்தது. சாண்ட்னர் மற்றும் சவுத்தி கலீல் பந்தில் போல்டாகின‌ர்.

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் க்ராண்தோம் 50, டெய்லர் 42, வில்லியம்சன் 20 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் க்ருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

2வது டி20 போட்டியில் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற‌ இலக்குடன் இந்தியா ஆடத்துவங்கியுள்ளது. தவான் மற்றும் ரோஹித் ஷர்மா துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

ஓவர் 1:

சவுத்தி வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியுடன் இந்தியா 6 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 19 ஓவரில் 153 ரன்கள் தேவை.

ஓவர் 2:

குகெலிஜின் வீசிய ஓவரில் இந்தியா 4 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 18 ஓவரில் 149 ரன்கள் தேவை.

ஓவர் 3:

பெர்குசன் வீசிய ஓவரில் இந்தியா ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 17 ஓவரில் 138 ரன்கள் தேவை.

ஓவர் 4:

குகெலிஜின் வீசிய ஓவரில் இந்தியா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 16 ஓவரில் 126 ரன்கள் தேவை. டி20 போட்டிகளில் 100வது சிக்சரை அடித்தார் ரோஹித் ஷர்மா!

ஓவர் 5:

சவுத்தி வீசிய ஓவரில் இந்தியா 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 15 ஓவரில் 117 ரன்கள் தேவை.

ஓவர் 6:

பெர்குசன் வீசிய ஓவரில் இந்தியா ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 14 ஓவரில் 109 ரன்கள் தேவை. பவர்ப்ளேயில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 7:

சாண்ட்னர் வீசிய ஓவரில் இந்தியா 5 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 13 ஓவரில் 104 ரன்கள் தேவை. இந்தியா விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர் 8:

இஷ் சோதி வீசிய ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 12 ஓவரில் 93 ரன்கள் தேவை. இந்தியா விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது.

35 ரன்கள் எடுத்த நிலையில் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார். இதற்கு முன் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை தற்போது ரோஹித் முறியடித்துள்ளார்.

ஓவர் 9:

சாண்ட்னர் வீசிய ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 11 ஓவரில் 82 ரன்கள் தேவை. இந்தியா விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 28 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதமடித்தார்.

ஓவர் 10:

இஷ் சோதி வீசிய ஓவரில் இந்தியா 6 ரன்கள் எடுத்தது. இந்தியா வெற்றி பெற இன்னும் 10 ஓவரில் 76 ரன்கள் தேவை. இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய ரோஹித் ஷர்மா 29 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்த நிலையில், சோதி பந்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 11:

பெர்குசன் வீசிய ஓவரில் இந்தியா 5 ரன்கள் எடுத்தது. 11 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 54 பந்தில் 71 ரன்கள் தேவை. தவான் 30 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் க்ராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 12:

சோதி வீசிய ஓவரில் இந்தியா 9 ரன்கள் எடுத்தது. 12 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 48 பந்தில் 62 ரன்கள் தேவை.

ஓவர் 13:

குகெலிஜின் வீசிய ஓவரில் இந்தியா 10 ரன்கள் எடுத்தது. 13 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 42 பந்தில் 52 ரன்கள் தேவை.

ஓவர் 14:

மிட்செல் வீசிய ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுத்தது. 14 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 36 பந்தில் 37 ரன்கள் தேவை. விஜய் ஷங்கர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து மிட்செல் பந்தில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஓவர் 15:

சவுத்தி வீசிய ஓவரில் இந்தியா 7 ரன்கள் எடுத்தது. 15 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 30 பந்தில் 30 ரன்கள் தேவை.

ஓவர் 16:

சோதி வீசிய ஓவரில் இந்தியா 6 ரன்கள் எடுத்தது. 16 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 24 பந்தில் 24 ரன்கள் தேவை.

ஓவர் 17:

சவுத்தி வீசிய ஓவரில் இந்தியா 13 ரன்கள் எடுத்தது. 17 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 18 பந்தில் 11 ரன்கள் தேவை.

ஓவர் 18:

பெர்குசன் வீசிய ஓவரில் இந்தியா 8 ரன்கள் எடுத்தது. 18 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 12 பந்தில் 3 ரன்கள் தேவை.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா 18.5 ஓவரில் இலக்கை எட்டி இரண்டாவது டி20 போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 1-1  என்ற கணக்கில் சமன் செய்தது. தோனி 20 ரன்களுடனும், பன்ட் 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறினாலும் க்ராண்தோம் 50, டெய்லர் 42, வில்லியம்சன் 20 ரன்கள் குவிக்க 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் க்ருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் அதிரடி அரைசதம், தவான் 30, பன்ட் 40 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன், மிட்செல், சோதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இது நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் முதல் டி20 வெற்றியாகும். 

இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்னயிக்கும் கடைசி டி20 போட்டில் ஹாமில்டனில் 10ம் தேதி நடைபெறுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
"ஆக்லாந்து ரசிகர்களால் இந்தியாவில் இருப்பதாக உணர்கிறேன்" - நாதன் மெக்குலம்
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்து ரோஹித் ஷர்மா உலக சாதனை!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
நியூசி.,க்கு எதிரான டி20 போட்டி: சர்ச்சையை கிளப்பிய டிஆர்எஸ் முடிவு!
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
2வது டி20 போட்டி: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! #Highlights
Advertisement