ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!

Updated: 12 July 2019 20:31 IST

20 வயதாகும் ஸ்பின் பவுலர் ரஷித் கான் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rashid Khan Named Afghanistan Captain Across Formats
உலகக்கோப்பை தொடரில் எந்த ஒரு ஆட்டத்திலும் ஆப்கன் அணி வெற்றி பெறவில்லை © AFP

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆப்கன் அணி எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில் புதிய கேப்டனை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த குல்பாதின் நைப் மாற்றப்பட்டு அவருக்கு பதிலக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அஸ்கர் ஆப்கனை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
கேப்டன் மாற்றத்திற்கான உடனடி காரணத்தை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. 20 வயதே ஆகும் ரஷித் கான் 20 ஓவர் போட்டிகளுக்காக ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தொடர்களில் பங்கெடுத்துள்ளார். 

20 ஓவர் போட்டிகளை பொருத்தளவில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ரஷித் கான் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 44 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித் சாதனை படைத்துள்ளார். 

போர் மற்றும் உள்நாட்டு பிரச்னைகளால் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் போருக்கு பின்னர் அகதியாக திரும்பி வந்தவர்கள் முகாம்களில் விளையாடி கிரிக்கெட்டை கற்றுக் கொண்டனர். 

ஆப்கன் அணி தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள அண்டை நாடான பாகிஸ்தான் உதவி செய்தது. உலக கோப்பையில் எந்த போட்டியிலும் வெற்றி பெறாவிட்டாலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் அளவுக்கு ஆப்கன் வளர்ந்துள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • 20 ஓவர் போட்டிகளில் நம்பர் ஒன் பவுலர் ரஷித் கான்
  • உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக ரஷித் சிறப்பாக செயல்பட்டார்
  • துணை கேப்டனாக அஸ்கர் ஆப்கன் நியமனம்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement