உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறாரா தோனி?!! - புதிய தகவலால் பரபரப்பு!

Updated: 03 July 2019 18:18 IST

இந்தியா உலகக்கோப்பையை வென்றால், அது தோனிக்கு விடை கொடுக்கும் நல்ல நேரமாக அமையும் என்று தகவல்கள் பரவுகின்றன.

MS Dhoni Likely To Retire After India
உலகக்கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் தோனி 223 ரன்களை குவித்துள்ளார். © AFP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெற்றி பெற்று விட்டால் அது தோனிக்கு விடை கொடுக்கும் நல்ல நேரமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. 

உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 14-ம்தேதி லார்ட்ஸில் நடைபெறுகிறது. தோனி ஓய்வு பெறப்போவதாக வரும் தகவல்கள் குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தோனி என்ன முடிவு எடுப்பார் என்று யாரும் கணிக்க முடியாது. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் அவர் விளையாடுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தவர்தான்  தோனி. இந்த நேரத்தில் எதையும் கணிக்க முடியாது' என்றார். 

உலகக்கோப்பை தொடரில் மட்டும் 7 இன்னிங்ஸில் விளையாடியுள்ள தோனி 223 ரன்களை குவீத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 93-க்கும் அதிகமாக உள்ளது. 

ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று தோனியை யாரும் வற்புறுத்தவில்லை. ஆனால் உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவுக்கு தோனி வந்திருக்கலாம் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர். 

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறும் முடிவில் தோனி இருப்பதாக தகவல்
  • உலகக்கோப்பை தொடரில் 223 ரன்களை இதுவரை தோனி எடுத்துள்ளார்
  • தோனியின் முடிவை கணிக்க முடியாது என்கின்றனர் வல்லுனர்கள்
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"அவரை வெளியேற்றுவதற்கு முன், தோனியே விலகினால் நல்லது" - சுனில் கவாஸ்கர்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
Advertisement