3வது டி20: இந்தியா தோல்வி; தொடரை இழந்தது #Highlights

Updated: 10 February 2019 16:30 IST

3 வது டி20 : 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து.

Cricket Highlights, IND vs NZ 3rd T20I, India vs New Zealand Match Updates: India Eye Maiden T20I Series Win In New Zealand
சீரான இடைவேளையில் விக்கெட்கள் விழுந்ததால் தோல்வி அடைந்தது இந்தியா © AFP

இந்தியா நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் டி20 தொடர் 1-1 என்ற சமனிலையில் உள்ளது. தொடரை நிர்ணைக்கும்  கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. 

இதில் இந்தியா வென்றால், நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வென்ற முதல் இந்தியா அணி என்ற சாதனையை படைக்கும்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் 2 சிக்ஸர்களை ரோஹித் அடித்தால், டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையை ரோஹித் பெருவார். இதுவரை 102 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித். முதல் இடத்தில் 103 சிக்ஸர்கள் உடன் கெயல் மற்றும் குப்தில் உள்ளனர்.

டாஸ் வென்ற இந்தியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா அணியில், சஹால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியில், பெர்குசன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிலைரர் திக்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

நியூசிலாந்து: முன்ரோ, டிம் ஸிபெர்ட், வில்லியம்சன், ராஸ் டெய்லர், டர்யல் மிட்செல், க்ராண்ட்ஹோம், சாண்டனர், ஸ்காட் குகெலிஜின், சவுத்தி, சோதி, பிலைரர் திக்னர்.

இந்தியா: தவான், ரோஹித், பன்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப், கலீல் அகமது.

ஓவர் 1:

நியூசிலாந்து அணிக்காக முன்ரோ மற்றும் ஸிபெர்ட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தியாவிற்காக புவனேஷ்வர் குமார் பந்து வீசினார். ஒவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் முன்ரோ. முதல் ஓவர் முடிவில் 11 ரன்கள் குவித்தது நியூசிலாந்து.

ஓவர் 2:

இரண்டாவது ஓவரை கலீல் அகமது வீசினார். ஸிபெர்ட் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். இரண்டாவது ஓவரில் 8 ரன்களை குவித்து 2 ஓவர் முடிவில் 19 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் விளையாடி வருகிறது நியூசிலாந்து

ஓவர் 3:

மூன்றாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே வழங்கினார். 3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 4:

நான்காவது ஓவரை கலீல் அகமது வீசினார். இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ஸிபெர்ட். மூன்றாவது பந்தை சிக்ஸர் அடித்து அசத்தினார் ஸிபெர்ட். கடைசி பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார் ஸிபெர்ட். 16 ரன்கள் இந்த ஓவரில் எடுக்கப்பட்டது. 

ஓவர் 5:

ஹர்திக் பாண்ட்யா ஐந்தாவது ஓவரை வீசினார். ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்கள் குவிக்கப்பட்டது. ஐந்து ஓவர் முடிவில் 46 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகிறது நியூசிலாந்து.

ஓவர் 6:

க்ருணால் பாண்ட்யா இந்த ஓவரை வீசினார். ஓவரின் இரண்டாவது பந்தில்  சிக்ஸ்ர் அடித்தார் முன்ரோ. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் முன்ரோ. ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடித்தார் ஸிபெர்ட். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் குவிக்கப்பட்டது.

ஓவர் 7:

ஹர்திக் வீசிய இந்த ஓவரின் முதல் பந்து பவுண்டரிக்கும் மூன்றாவது பந்து சிக்ஸருக்கும் சென்றது. இந்த ஓவரின் முடிவில் நியூசிலாந்து 79 ரன்கள் குவித்துள்ளது. முன்ரோ 35 ரன்களும் ஸிபெர்ட் 43 ரன்களும் குவித்துள்ளனர்.

ஓவர் 8:

8 வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். நான்காவது பந்தில் ஸிபெர்ட் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆட்டத்தின் முதல் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். சிறப்பாக விளையாடிய ஸிபெர்ட் 3 பவுண்டரி 3 சிக்ஸ்ர் உடன் 43 ரன்களை குவித்தார். அடுத்தாக கேன் வில்லியம்ஸன் களத்திற்கு வந்துள்ளார். ஓவரின் முடிவில் நியூசிலாந்து 83/1.

ஓவர் 9:

மறுபடியும் க்ருணால் பாண்ட்யா. தனது முதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கினார் க்ருணால் பாண்ட்யா. இந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே வழங்கினார்.

ஓவர் 10:

குல்தீப் வீசிய இந்த ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார் முன்ரோ. 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 96/1. முன்ரோ 46 ரன்கள் குவித்துள்ளார்.

ஓவர் 11:

க்ருணால் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு தனது 9 வது அரைசதத்தை கடந்தார் முன்ரோ. இந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. 

ஓவர் 12: 

தனது மூன்றாவது ஓவரை வீசினார் குல்தீப். 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் அரைசத்தை கடந்து  விளையாடி வருகிறார் முன்ரோ. இந்த ஓவரில் வில்லியன்சன் தன் பங்கிற்கு பவுண்டரி அடித்தார். 12 ஓவர்களில் நியூசிலாந்து 118/1 குவித்துள்ளது.

ஓவர் 13: 

ஹர்திக் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் முன்ரோ கொடுத்த எளிதான கேட்ச்சை தவற விட்டார் கலீல் அகமது. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கும் நான்காவது பந்தை சிக்ஸருக்கும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசினார் முன்ரோ. முன்ரோவை கட்டுபடுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர் இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள். 

ஓவர் 14:

குல்தீப் வீசிய இந்த ஓவரின் இரண்டாவது பந்தீல் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார் முன்ரோ. 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார் முன்ரோ. அடுத்த பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்தார் க்ராண்ட்ஹோம்.

ஓவர் 15:

இந்த ஓவரை கலீல் அகமது வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் வில்லியம்சன். 3வது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார் வில்லியம்சன். அதிரடியாக விளையாட எண்ணிய வில்லியன்சன், நான்காவது பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார் வில்லியன்சன். க்ராண்ட்ஹோம் உடன் இணைந்தார் மித்சல். 

ஓவர் 16:

க்ருணால் வீசிய இந்த ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார்  க்ராண்ட்ஹோம். ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் க்ராண்ட்ஹோம். 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார் க்ருணால். 16 ஓவர் முடிவில் 167 ரன்களை குவித்துள்ளது நியூசிலாந்து.

ஓவர் 17:

புவனேஷ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார் க்ராண்ட்ஹோம். கடைசி பந்தும் பவுண்டரிக்கு செல்ல 17 ஓவரில் 182 ரன்களை குவித்துள்ளது நியூசிலாந்து.

ஓவர் 18:

ஹர்திக் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் கடினமான கேட்ச்சை தவற விட்டார் ரோஹித் சர்மா. இட்ரண்டாவது பந்து பவுண்டரிக்கு சென்றது. 18 ஓவரின் முடிவில் 192 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் நியூசிலாந்து உள்ளது.

ஓவர் 19:

புவனேஷ்வர் குமார் வீசிய இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் க்ராண்ட்ஹோம் தோனியிடன் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய க்ராண்ட்ஹோம். 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். புது பேட்ஸ்மேனாக ராஸ் டெய்லர் வந்தார். ஐந்தாவது பந்து பவுண்டரியாக மாறியது. 19 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது நியூசிலாந்து.

ஓவர் 20:

நியூசிலாந்து ஆட்டத்தின் கடைசி ஓவரை கலீல் வீசினார். முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டார் டெய்லர். ஆட்டத்தை பவுண்டரி மூலம் முடித்தார் டெய்லர். 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்து அசத்தியது நியூசிலாந்து.

முன்ரோவின் அதிரடியான அரைசதம், க்ராண்ட்ஹோம் அதிரடியாலும் 200 குவித்தது நியூசிலாந்து. இந்தியா தரப்பில் குல்தீப் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். க்ருணால் பாண்ட்யா 54 ரன்களை வாரி வழங்கினார்.

213 ரன்கள் குவித்தால் வெற்றி என கடினமான இலக்குடன் சற்று நேரத்தில் தனது ஆட்டத்தை துவங்கவுள்ளது இந்தியா.

ஓவர் 1:

213 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது இந்தியா. முதல் ஓவரில் ரோகித்தும் தவானும் களம் இறங்கினர். ஆனால் இதில் தவான் முதல் ஓவரிலே தவான் அவுட் ஆனார்.

ஓவர் 2:

ரோஹித் சர்மாவின் பவுண்டரி மூலம் 2 ஓவர் முடிவில் 18 ரன்கள் குவித்தது இந்தியா.

ஓவர் 3:

ஸ்காட் வீசிய இந்த ஓவரில் நம்ம விஜய்சங்கர் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள் குவித்தது இந்தியா.

ஓவர் 4:

பிலையர் வீசிய இந்த ஓவரில் விஜய்சங்கர் பவுண்டரி அடித்தார். 4 ஓவர் முடிவில் இந்தியா 38 ரன்கள் குவித்தது. 

ஓவர் 5:

தீம் சவுத்தி வீசிய இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார் ரோஹிடத்

இந்த போட்டியை வெல்ல இந்தியாவிற்கு 90 பந்துகளில் 164 ரன்கள் தேவை.

ஓவர் 6:

ஸ்காட் வீசிய இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிட் ஆப் திசையில் பவுண்டரி அடித்தார் விஜய்சங்கர். இந்த ஓவரில் 8 ரன்கள் குவித்தது இந்தியா. ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் விஜய்சங்கர் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் குவித்துள்ளனர்.

ஓவர் 7:

சுழல் பந்து வீச்சாளர் சாண்ட்னர் வீசிய இந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே குவித்தது இந்தியா.  இந்த போட்டியை வெல்ல இந்தியாவிற்கு 78 பந்துகளில் 151 ரன்கள் தேவை .

ஓவர் 8:

சோதி வீசிய இந்த ஓவரில் இரண்டு விஜய்சங்கர் அட்டகாசமான சிக்ஸர் அடித்து அமர்களப்படுத்தினார். இந்த ஓஅவரில் 14 ரன்கள் குவித்தது இந்தியா. 

ஓவர் 9:

ஒவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார் விஜய்சங்கர். மூன்றாவது பந்தில் சாண்ட்னர் பந்தில் அவுட் ஆனார் விஜய்சங்கர். 2 சிக்ஸ்ர்கள் 5 பவுண்டரி உடன் 43 ரன்களை குவித்து அசத்தினார் விஜய்சங்கர். பண்ட் அடுத்த பேட்ஸ்மேனாக களமிறங்கினார். பவுண்டரியுடன் தனது ரன் கணக்கை துவங்கினார் பண்ட். அடுத்த பந்தையே சிக்ஸர் அடித்து அசத்தினார். 16 ரன்கள் இந்த ஓவரில் குவிக்கப்பட்டது.

ஓவர் 10:

சோதி வீசிய இந்த ஓவரில் இரண்டாவது பந்தை சிக்ஸர் அடித்து அசத்தினர் பண்ட். கடைசி பந்தையும் சிக்ஸர் அடித்து 6 பந்துகளில் 23 ரன்கள் குவித்துள்ளார் பண்ட். 10 ஓவர்கள் முடிவில் இந்தியா 108 ரன்கள் குவித்துள்ளது.

ஓவர் 11:

பிலையர் வீசிய இந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டது.

பொறுமையாக விளையாடிவரும் ரோஹித் 26 பந்துகளில் 33 ரன்கள் குவித்துள்ளார். அதிரடியாக விளையாடி வரும் பண்ட் 8 பந்துகளில் 26 ரன்க்ள் குவித்துள்ளார்.

ஓவர் 12:

மித்சல் வீசிய இந்த ஓவரில் வெறும் 5 ரன்களே எடுத்தது இந்தியா. இந்தியாவிற்கு வெற்றி பெற 48 பந்துகளில் 93 ரன்கள் தேவை.

ஓவர் 13: 

பிலையர் வீசிய இந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பண்ட் வில்லியம்சனிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். சிக்ஸ்ர் மூலம் தன் ரன் கணக்கை துவங்கினார் ஹர்திக் பாண்ட்யா. 13 வது ஓவரின் முடிவில் இந்தியா 128/3. 

ஓவர் 14:

மித்சலின் இந்த ஓவரில் மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி அமர்க்களப்படுத்தினார் ஹர்திக். கடைசி பந்தில் ரோஹித் 38 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த பேட்ஸ்மேனாக தோனி வந்தார்.

ஓவர் 15:

ஸ்கார்ட் வீசிய இந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் ஹர்திக் அவுட் ஆனார். 11 ரன்களில் 21 ரன்கள் குவித்து அவுட் ஆனார் ஹர்திக். தோனியுடன் தினேஷ் கார்த்திக் களத்தில் இணைந்தார். இந்த ஓவரின் முடிவில் இந்தியா 145 ரன்கள் குவித்தது. வெற்றி பெற 30 பந்துகளில் 68 ரன்கள் தேவை. 

ஓவர் 16:

மித்சலின் இந்த ஓவரில் இரண்டாவது பந்தில் தோனி அவுட் ஆனார். க்ருணால் பாண்ட்யா தினேஷ் உடன் இணைந்தார். 4 வது பந்தை சிக்ஸர் அடித்து நம்பிக்கை அளித்தார் தினேஷ் கார்த்திக்.16 ஓவரின் முடிவில் இந்தியா 154/6.

ஓவர் 17:

பிலையரின் முதல் பந்தை லாங் ஆப் திசையில் சிக்ஸர் அடித்தார் கார்த்திக். இன்னும் 3 ஓவர்களில் இந்தியாவிற்கு 49 ரன்கள் தேவை.

ஓவர் 18:

ஆட்டத்தின் முக்கியமான இந்த ஓவரை சவுதி வீசினார். முதல் பந்தை சிக்ஸர், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் க்ருணால். மூன்றாவது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி நம்பிக்கை அளித்தார் பாண்ட்யா. இந்தியாவிற்கு 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை.

ஓவர் 19:

ஸ்கார்ட் இந்த ஓவரை வீசினார். இந்தியாவிற்கு 10 பந்துகளில் 29 ரன்கள் தேவை. மூன்றாவது பந்தை சிக்ஸர் அடித்தார் கார்த்திக். கடைசி பந்தை சிக்ஸர் அடித்து அசத்தினார் க்ருணால். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.

ஓவர் 20:

19.1 : கார்த்திக் இரண்டு ரன்கள்.

19.2 : ரன் ஏதும் இல்லை.

19.3: ரன் ஏதும் இல்லை

19.4 :ஒரு ரன். இரண்டு பந்துகளில் 13 ரன்கள் தேவை

19.5 : ஒரு ரன்.

19.6 : வைட்

19.6: சிக்ஸர்.

நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை இழந்தது இந்தியா. இதன் மூலம் டி20 தொடரை 2-1 என கணக்கில் நியூசிலாந்து வென்றது.

 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தேசியக் கொடிக்கு மரியாதை... நெகிழ வைத்த தல தோனி!
தேசியக் கொடிக்கு மரியாதை... நெகிழ வைத்த தல தோனி!
3வது டி20: இந்தியா தோல்வி; தொடரை இழந்தது #Highlights
3வது டி20: இந்தியா தோல்வி; தொடரை இழந்தது #Highlights
ஹாமில்டன் டி20: "ஐ யம் வெயிட்டிங்" சொல்லும் ரோஹித் ஷர்மா
ஹாமில்டன் டி20: "ஐ யம் வெயிட்டிங்" சொல்லும் ரோஹித் ஷர்மா
Advertisement