"ஆப்கான் மக்களின் முகத்தில் சிரிப்பை பார்க்க வைத்தது கிரிக்கெட்தான்" - ரஷித்கான்

Updated: 30 January 2019 13:43 IST

ஆப்கானிஸ்தான் அறிமுக போட்டியில் ஜூன் 1ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Rashid Khan Says Cricket Can Bring Smile On Faces Of People In Afghanistan
ரஷித்கான், ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். © AFP

கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரஷித்கான், ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். உலக அளவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆச்சர்யபடுத்தி வருகிறது. 

ரஷித்கான் போலவே முகமது நபி, முஜிப்புர் ரஹ்மான் ஆகியோர் உலகக் கோப்பையின் நம்பிக்கையாக விளங்குகின்றனர். ரஷித்கான் ஐசிசி இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், "ஆப்கான் மக்கள் இப்போதுதான் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பையில் கலந்து கொள்வது பெருமையான விஷயம். ஆப்கான் மக்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். அதற்காக நாங்கள் எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற 100 சதவிகித உழைப்பை  போடுகிறோம். இதுதான் அவர்களது அன்புக்கு நாங்கள் காட்டும் அன்பு" என்றார்.

மே 30ம் தேதி துவங்கவுள்ள உலகக் கோப்பையில் ரஷித்கானை ஆப்கான் பெரிதும் நம்பியுள்ளது.

ஆல்ரவுண்டர் நபி மற்றும் ஸ்பின்னர் முஜிப்பின் ஆட்டத்தையும் ஆப்கான் மலையாக நம்பியுள்ளது.

"ஆப்கான் உலகக் கோப்பையில் ஆடும் அனைத்து ஆட்டங்களும் நல்ல அனுபவத்தை தரும், உலகக் கோப்பை போட்டிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார் ரஷித்கான். 

ஆப்கானிஸ்தான் அறிமுக போட்டியில் ஜூன் 1ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆப்கானிஸ்தான் அறிமுக போட்டியில் ஜூன் 1 ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது
  • ரஷித்கான், ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்
  • உலக கோப்பை 2019 மே 30 முதல் துவங்குகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement