பெண்கள் பற்றிய கருத்து: பாண்ட்யா, ராகுலுக்கு பிசிசிஐ நோட்டிஸ்!

Updated: 09 January 2019 16:39 IST

பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்

Hardik Pandya, KL Rahul Issued Notice By BCCI Committee Of Administrators Over Comments On Women
ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) மற்றும் கே.எல்.ராகுல் (KL Rahul) இருவருக்கும் பிசிசிஐ எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. © Instagram/hardikpandya93

பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக, இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. "அவர்கள் 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிப்பதாக கூறியுள்ளனர்" என்று பிசிசிஐ கூறியுள்ளது.

இந்த நோட்டிஸ் வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன் வைத்தார். அவை சர்ச்சையானதால் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத பாண்ட்யா, டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தனது பெற்றோரிடம், தான் பழகி வரும் பெண்கள் குறித்து சொன்னதாகவும், தான் பாலியல் உறவுகள் குறித்து கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

அதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் '' எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எந்த விதத்திலாவது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உள்நோக்கத்துடனும் காயப்படுத்தவில்லை'' என்று கூறியிருந்தார்.

இந்திய அணியில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பாண்ட்யா இணைந்தார். ஆனாலும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இந்தியா இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

 

மேலும் படிக்க - "இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டார் ஹர்திக் பாண்ட்யா!"

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவுடன் ஒரு அபிமான செல்ஃபியை பகிர்ந்த காதலி நடாசா!
ஹர்திக் பாண்ட்யாவுடன் ஒரு அபிமான செல்ஃபியை பகிர்ந்த காதலி நடாசா!
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் மற்றும் நடாசாவுக்கு வாழ்த்துக்கள் சொன்ன க்ருணால் பாண்ட்யா!
Advertisement