"ஸ்மித், வார்னருக்கு சலுகை இல்லை" - ஆஸ்திரேலிய‌ கிரிக்கெட் வாரியம் அதிரடி!

Updated: 20 November 2018 16:22 IST

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதற்காக மூவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

Steve Smith, David Warner Bans: Cricket Australia Rejects Reducing Punishment
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் காம்ரோன் பான்க்ராஃப்ட் ஆகியோரது தண்டனைக்காலம் குறைக்கப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. © AFP

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் காம்ரோன் பான்க்ராஃப்ட் ஆகியோரது தண்டனைக்காலம் குறைக்கப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதற்காக மூவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இதனை மறுபரீசீலனை செய்து தடைக்காலத்தைக் குறைக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்கால சேர்மன் எட்டிங்ஸ் நிராகரித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் மோசமான சமீபத்திய செயல்பாடுகளை மனதில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. 

கிரிக்கெட் வீரர்களுக்கான அமைப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை தடை குறித்த விஷயங்களுக்காக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. டேவிர் பீவர், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சேர்மன் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்ட நிலையில் எட்டிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து பேசியுள்ள எட்டிங்ஸ் ''தடையை குறைக்க கோரி வீரர்களுக்கான அமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தை தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை தரும்" என்று கூறினார். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுபோன்ற தடைகளில் எந்த மாற்றத்தையும் இதுவரை கொண்டு வந்ததில்லை. இவர்களை ஆஸி கிரிக்கெட் நிர்வாகம் உள்ளூர் போட்டிகளுக்கு தான் முதலில் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
கே.எல். ராகுலின் சிறப்பான ஸ்டம்பிங் பிறகு பன்ட்டை கலாய்த்த ரசிகர்கள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
"பன்ட்டை Babysitter ஸ்லெட்ஜிங் செய்தது ஏன்" - காரணம் சொல்லும் டிம் பெயின்!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
Advertisement