Listen to the latest songs, only on JioSaavn.com
 

“நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு நம் மீது உள்ளது” - ரோஹித் ஷர்மா!

Updated: 31 March 2020 15:34 IST

ரோஹித் ஷர்மா கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ரூ.80 லட்சத்தை பல்வேறு நிவாரண நிதிகளுக்கு நிவாரணம் அளித்துள்ளார்.

Coronavirus: Rohit Sharma Donates Rs 80 Lakh To Relief Funds
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுடன் ரோஹித் ஷர்மா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினார். © Instagram

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட, இந்தியா ஸ்டார் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் வழங்கியுள்ளார். இந்திய ஒருநாள் அணியின் துணைத் கேப்டனாக இருக்கும் ரோஹித் முறையே பிரதமர் மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கு (மகாராஷ்டிரா) ரூ.45 லட்சம் மற்றும் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் தேசிய லாக்டவுனில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுகின்ற “சோமாட்டோ ஃபீடிங் இந்தியா”வுக்கு ரூ.5 லட்சமும், தெரு நாய்களின் நலனுக்கு உதவ மற்றொரு ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளார்.

“நம் நாட்டை மீண்டும் தன் காலில் நிற்க வைக்க வேண்டிய பொறுப்பு நம்மீதுள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.45 லட்சமும், மகாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், @FeedingIndia - வுக்கு ரூ.5 லட்சமும், தெரு நாய்களின் நலனுக்காக ரூ.5 லட்சமும் வழங்கியுள்ளேன். நம் தலைவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை ஆதரிப்போம், @narendramodi @CMOMaharashtra,” என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்தார்.

ரோஹித், பேட்டிங் மேஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கர், அவரது கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, மற்றும் அவரது டெஸ்ட் அணியின் அஜின்கியா ரஹானே உள்ளிட்ட சிறந்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இணைந்து, நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. செவ்வாய்க்கிழமை காலை வரை பாதிப்பு 225 ஆக உள்ளது.

இந்தியாவில், கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை இரவு வரை வழக்குகள் 1,251 ஆக உயர்ந்துள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ரோஹித், பல்வேறு கொரோனா வைரஸ் நிவாரண நிதிகளுக்கு ரூ.80 லட்சம் வழங்கினார்
  • விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுடன் நன்கொடை வழங்கியுள்ளார்
  • நாட்டை மீண்டும் காலில் நிறுத்த குடிமக்கள் மீது பொறுப்பு உள்ளது என்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
Advertisement