Listen to the latest songs, only on JioSaavn.com
 

கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!

Updated: 03 April 2020 14:18 IST

இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, மேரி கோம் உள்ளிட்ட நாட்டின் 40 முக்கிய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு சந்திப்பை நடத்தினார்.

Coronavirus: PM Modi Holds Meeting With 40 Sportspersons Including Virat Kohli, Sachin Tendulkar
வீடியோ மூலம் பிரதமர் மோடி 40 முக்கிய விளையாட்டு வீரர்களுடன் பேசினார். © Twitter

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து, இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, மேரி கோம் உள்ளிட்ட நாட்டின் 40 முக்கிய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு சந்திப்பை நடத்தினார். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 24 அன்று 21 நாள் பூட்டுதல் அமல்படுத்தப்பட்ட பின்னர், பிரதமர் விளையாட்டு பிரமுகர்களுடன் உரையாடுவது இதுவே முதல் முறை.

பி.டி.உஷா, புல்லேலா கோபிசந்த், விஸ்வநாதன் ஆனந்த், ஹிமா தாஸ், பஜ்ரங் புனியா, பி.வி.சிந்து, ரோஹித் சர்மா, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் ஒன்றாக இருப்பதைக் காண்பிப்பதற்காக ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு தனித்துவமான பயிற்சிக்காக மக்கள் ஒன்றுகூட வேண்டும் என்று இன்று காலை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

“ஏப்ரல் 5ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் என்று” என்று மோடி கூறியுள்ளார். 

கொடிய நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் 130 கோடி இந்தியர்களில் யாரும் தனியாக இல்லை என்ற செய்தியை இது அனுப்பும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பிரதமர் மோடி 40 விளையாட்டு வீரர்களுடன் சந்திப்பு நடத்தினார்
  • இந்தச் சந்திப்பில் கோலி, டெண்டுல்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்
  • பி.டி.உஷா, கோபிசந்த், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்
தொடர்புடைய கட்டுரைகள்
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
விராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
அக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
தாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்!
Advertisement