Listen to the latest songs, only on JioSaavn.com
 

பாகிஸ்தானின் பிரச்சாரத்தை ஆதரித்து, பின்னடைவை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

Updated: 01 April 2020 17:43 IST

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு ஆதரித்த இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங், சமூக வலைதளத்தில் எதிர்வினையைப் பெற்றனர்.

Coronavirus: Indian Cricketers Face Backlash For Supporting Pakistans Coronavirus Campaign
ஷாகித் அப்ரிடியின் பிரச்சாரத்தை ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆதரித்தனர். © AFP

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் மக்களை வீட்டில் தங்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தியாவுக்கு அண்டை நாடாகப் பாகிஸ்தானிலும் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு ஆதரித்த இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங், சமூக வலைதளத்தில் எதிர்வினையைப் பெற்றனர். இரு நாடுகளும் கசப்பான போட்டியாளர்களாக உள்ளனர். பாகிஸ்தானில் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு கேட்ட அப்ரிடியின் வேண்டுகோள், இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. வீடியோ செய்தியில் பங்களிக்குமாறு ஹர்பஜன் மக்களை வலியுறுத்தினார், மேலும் இரு நாடுகளிலும் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களை இதேபோன்ற முறையீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

“இவை சோதனை நேரங்கள், ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று யுவராஜ் ட்விட்டரில் நிதிக்கான வேண்டுகோளை விடுத்தார்.

இருவருக்கும் அப்ரிடி நன்றி தெரிவித்தாலும், இந்திய ட்விட்டர் பயனர்கள் ஒரு போட்டி வீரருக்கு இந்தியர்கள் அளித்த ஆதரவுக்கு ஆவேசத்துடன் பதிலளித்தனர்.

“உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா?" ஒரு ட்விட்டர் பயனர் எழுதினார். ஹர்பஜன் சிங் மீது “மரியாதை இழந்தோம்” என்று இன்னொருவர் எழுத்தினார். “மன்னிக்கவும் தோழர்களே, உங்களுக்கு அறிவு கெட்டு விட்டது,” என்று மற்றொருவர் பதிலளித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 2012-2013ம் ஆண்டு முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை.

இறுதியாகக் கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு புற்றுநோயிலிருந்து திரும்பிய உலகக் கோப்பை வென்ற பேட்ஸ்மேன் யுவராஜ், தனது ‘யுவீகேன்' அறக்கட்டளை மூலம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் பணம் திரட்டியுள்ளார்.

மார்ச் 24 முதல் 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் உள்ள இந்தியா, இதுவரை 1,600க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 38 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • அப்ரிடியின் கோவிட்-19 பிரச்சாரத்தை ஆதரித்த ஹர்பஜன் மற்றும் யுவராஜ் சிங்
  • இந்திய ட்விட்டர் பயனர்கள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர்
  • மார்ச் 24 முதல் இந்தியா 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
“அலைப்பேசிகள் இல்லாத காலம்” - த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்த யுவராஜ் சிங்!
“அலைப்பேசிகள் இல்லாத காலம்” - த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்த யுவராஜ் சிங்!
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியைத் தொடங்கினார் ஷர்துல்!
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியைத் தொடங்கினார் ஷர்துல்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
Advertisement