"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!

Updated: 31 August 2019 15:22 IST

32 வயதான மேற்கிந்திய வீரர், ஹர்திக பாண்ட்யா நீண்ட தூரம் வந்துள்ளார் மற்றும் குறைந்த மனப்பான்மையுடைய மக்கள் எப்போதும் அவரைப் போன்றவர்களைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைச் சொல்வார்கள் என்றார்.

Kieron Pollard Says Conservative People Say Negative Things About Guys Like Hardik Pandya
ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணிக்காக ஆடிய இருவரும் ஒரே ட்ரெஸிங் ரூமை பயன்படுத்தியுள்ளனர். © BCCI/IPL

உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளுக்கு திரும்பிய ஹர்திக் பாண்ட்யாவை, மேற்கிந்திய தீவுகளின் ஆல் ரவுண்டரான கீரன் பொல்லார்ட் பெரிதும் பாராட்டியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணிக்காக ஆடிய இருவரும் ஒரே ட்ரெஸிங் ரூமை பயன்படுத்தியுள்ளனர். 32 வயதான மேற்கிந்திய வீரர், ஹர்திக பாண்ட்யா நீண்ட தூரம் வந்துள்ளார் மற்றும் குறைந்த மனப்பான்மையுடைய மக்கள் எப்போதும் அவரைப் போன்றவர்களைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைச் சொல்வார்கள் என்றார். "நான் அவரை மும்பை அணிக்காக ஆடத் தொடங்கியதிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. அவர் இந்திய அணியின் சூப்பர் ஸடாராக மாறியுள்ளார்," என்று கீரன் பொல்லார்ட் கூறியுள்ளார்.

"ஹர்திக் பாண்ட்யா விளையாடும் விதம் மற்றும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் போன்றவை அவர் களத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க தோன்றும். மிகவும் குறைந்த மனபான்மையுடைய நபர்களாகிய நாம் எப்போதும் எதிர்மறையான விஷயங்களைச் சொல்ல முனைகிறோம்," என்றார் பொல்லார்ட்.

"களத்துக்கு வெளியில் ஒருவர் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்களோ, அதை களத்திலும் கொண்டு வர முடியும். இது மனிதனிலேயே பெரும் திறனைக் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

கடந்த வியாழக்கிழமை, ஹர்திக் பாண்ட்யா டி20 அணியில் இணைக்கிறார் என்று பிசிசிஐ அறிவித்தது. அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியில் இடம்பெறவுள்ளார்.

உலகக் கோப்பைக்கு பிறகான வேலைபளுவால் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா இப்போது அணியில் இணைந்து ஆடவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா 3-0 என்று வெற்றி பெற்றது. இதில் க்ருணால் பாண்ட்யா, தொடருக்கான ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

டிவி தொடரில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் இருவரும் பெண்களுக்கு எதிரான கருத்து சொன்னதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அது ஹர்திக் பாண்ட்யா பின்னடைவாக இருந்தது.

ஹர்திக் பாண்ட்யாவின் டிவி நிகழ்ச்சி குறித்து பேசிய பொல்லார்ட், "கொஞ்ச காலத்தில் அவர் நிறைய விஷயங்களை கடந்து வந்துள்ளார். இங்கிருந்து தான் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும். அவர் கடினமாக உழைக்கிறார். அவர் இப்போது செய்துகொண்டிருப்பது எனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியமாக இல்லை," என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
Advertisement