ராகுல், பாண்ட்யா விஷயத்தை ஓம்பட்ஸ்மன் விசாரிக்க நிர்வாகக்குழு கோரிக்கை!

Updated: 07 March 2019 15:27 IST

ராகுல், பாண்ட்யா இருவரும் பெண்களைப்பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறான கருத்து தெரிவித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

COA Set To Refer KL Rahul-Hardik Pandya Matter To Ombudsman, BCCI Snub At ICC Also To Be Discussed
விசாரணை தொடரும் வரை போட்டிகளில் ஆட அனுமதிக்கப்பட்டனர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ராகுல். © Instagram

இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகிக்கும் நிர்வாகக்குழு ஹர்திக் பாண்ட்யா, ராகுல் விஷயத்தை விசாரிக்க பிசிசிஐ சமீபத்தில் அமைத்த ஓம்பட்ஸ்மன்னை கேட்டுக் கொண்டுள்ளது. ராகுல், பாண்ட்யா இருவரும் பெண்களைப்பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறான கருத்து தெரிவித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், விசாரணை தொடரும் வரை போட்டிகளில் ஆட அனுமதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற விதிப்படி அமைக்கப்பட்ட ஓம்பட்ஸ்மனை இந்த வழக்கை விசாரிக்க நிர்வாகக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஓம்பட்ஸ்மன் அமைக்கப்பட்ட பிறகு நடக்கும் முழுமையான கூட்டம் என்று இதில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக நிர்வாக்குழு சேர்மன் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் டி.கே. ஜெயின் . அவரிடம் பிசிசிஐ யின் எந்த வழக்குகளும் விசாரனைக்கு வரலாம். அதில் பாண்ட்யா, ராகுல் விஷயமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல ஐசிசிக்கு அனுப்பிய கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு உதவக்கூடாது என்று ஐசிசிக்கும் கடிதம் எழுதியுள்ளது பிசிசிஐ. இந்த கருத்துக்கு ஐசிசி எந்த வித கருத்தையும் இந்த விஷயத்தில் தற்போது முன்வைக்காது என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் மார்ச் 23 துவங்கும் ஐபிஎல் தொடர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் குறித்த விவாதமும் இடம் பெற்றதாக தெரிகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • ராகுல் மற்றும் பாண்ட்யா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
  • ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் பாதில் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்
  • விசாரணை தொடரும் வரை போட்டிகளில் ஆட அனுமதிக்கப்பட்டனர்
தொடர்புடைய கட்டுரைகள்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
புதிய தேர்வுக்குழு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியை தேர்வு செய்யவுள்ளது - கங்குலி!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
வருங்கால மனைவி நடாசாவுடன் அபிமான படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"இந்த அற்புதமான உணர்வைத் தவறவிட்டேன்" - பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
"என்ன நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை" - ஹர்திக் பாண்ட்யா!
Advertisement