நியூசிலாந்து மசூதி தாக்குதல் எதிரொலி: ரத்தானது மூன்றாவது டெஸ்ட்

Updated: 15 March 2019 15:24 IST

Christchurch Shooting: நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற‌ குண்டுவெடிப்பிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி காயமின்றி தப்பித்தது.

Christchurch Mosque Shooting: New Zealand, Bangladesh Third Test Called Off
New Zealand Mosque Shooting: ''வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" - ஜலால் யுனஸ் © AFP

நியூசிலாந்தில் மசூதியில் நடைபெற்ற தாக்குதல் காரணமாக நியூசிலாந்து- பங்களாதேஷ் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர், மேலும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து ஐசிசியும் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. க்றைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற‌ தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும் தெரிவித்து கொண்டது. இரு அணி விரர்களும் நலமாக உள்ளதாகவும், மூன்றாவது போட்டி ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது. 

நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற‌ குண்டுவெடிப்பிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி காயமின்றி தப்பித்தது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் ஜலால் யுனஸ் கூறும் போது '' அனைத்து வீரர்களும் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிக்கு புறப்பட்டு தயாராக இருந்தனர். அவர்கள் நுழைவதற்கு சற்று முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

''வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார். 

பங்களாதேஷ் துவக்க வீரர் தமீம் இக்பால் தனது ட்விட்டரில் '' மொத்த அணியும் தாக்குதல் காரர்களிடமிருந்து தப்பித்துள்ளது. பயங்கரமான அனுபவம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் பலர் கொல்லப்பட்டதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது ட்விட்டில் '' அல்லா இன்றைய தாக்குதலிலிருந்து எங்களை காப்பாற்றியுள்ளார்'' என்று கூறினார்.

அணியின் அனலிஸ்ட் ஸ்ரீனிவாஸ் சந்திரசேகரன் ''நூழிலையில் தப்பித்தோம். இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. எல்லாரும் பதட்டமாக உள்ளனர் என்றார்.

அணியுடன் பயணித்த பங்களாதேஷ் நிருபர் மஸார் '' நாங்கள் மசூதி அடைந்தபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தது'' என்று கூறினார்.

அணி வீரர்கள் பேருந்துக்குள் இருந்ததாகவும், அறிவிப்பு வரும் வரை வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டதாகவும் கூறினார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: 16வது ஆட்டத்தில் மோதும் பங்களாதேஷ்-ஶ்ரீலங்கா அணிகள்!
உலகக் கோப்பை 2019: 16வது ஆட்டத்தில் மோதும் பங்களாதேஷ்-ஶ்ரீலங்கா அணிகள்!
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்?
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்?
தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் டிகாக்!
தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் போட்டியில் கவனிக்க வேண்டிய வீரர் டிகாக்!
உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் ட்ராக் ரெக்கார்ட்!
உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் ட்ராக் ரெக்கார்ட்!
Advertisement