''வந்தா ராஜாவாதான் வருவேன்'' சொல்லி அடித்த கில்லி கெயில்!

Updated: 21 February 2019 12:12 IST

சமீபத்தில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார் 39 வயதான கெயில்.

Chris Gayle Surpasses Shahid Afridi To Record Most Sixes In International Cricket
அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லாராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் கிறிஸ் கெயில். © AFP

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்த இலக்கை அவர் எட்டினார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் அவர் 12 சிக்சர்களை விளாசி தனது 24வது சதத்தை எட்டினார். சமீபத்தில் 2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டி தொடருடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார் 39 வயதான கெயில். 444 போட்டிகளில் ஆடி 488 சிக்சர்களை அடித்துள்ளார். அதேசமயம் அப்ரிதி 524 போட்டிகளில் 476 சிக்ஸர்களை அடித்திருந்தார். அப்ரிதியின் சாதனையை நேற்று கெயில் முறியடித்தார்.

கெயிலோ டெஸ்ட்டில் 98, ஒருநாள் போட்டிகளில் 287, டி20யில் 103 சிக்சர்களை அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கெயில், அப்ரிடிக்கு அடுத்த இடத்தில் மெக்குலம் 398, ஜெயசூர்யா 352, ரோஹித் ஷர்மா 349 ஆகிய இடங்களில் உள்ளனர். 

கெயில் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிக சதமடித்த வீரர். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் லாராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 24 சதங்கள் அடித்துள்ள கெயில் 9862 ரன்களை குவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் அணியில் இடம்பெறாமல் இருந்த கெயில் உலகக் கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்துடனான முதல் இரண்டு போட்டிகளில்  சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு  ஜூலையில் பங்களாதேஷுக்கு எதிராக ஆடியதற்கு பின் அவர் ஆடும் போட்டி இதுவாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்காக தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்ததும் கெயில் தான். 2015 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 215 ரன்களை குவித்தார்.

 

மேலும் படிக்க - உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானத்தை ஓட்டி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
 

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை போட்டி தொடருடன் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார் கெயில்
  • அப்ரிதியின் சாதனையை கெயில் முறியடித்தார்
  • கெயில் தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிக சதமடித்த வீரர்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement