கெயில் சிக்ஸர் மழையை பாராட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

Updated: 28 February 2019 22:15 IST

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த போட்டியில் கெயில் 97 பந்தில் 162 ரன்கள் அடித்தார்.

Chris Gayle Destroys Records In Six-Fest, Kings XI Punjab Ecstatic
கெயில் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். © AFP

கிறிஸ் கெயில் இங்கிலாந்துடனான நான்காவது ஒருநாள் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார். அதில் 25 சதங்களும் அடங்கும். 39 வயதான கெயில் 55 பந்தில் சதமடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த போட்டியில் கெயில் 97 பந்தில் 162 ரன்கள் அடித்தார்.

இதனை ஐபிஎல் போட்டியில் கெயில் ஆடும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் பாராட்டியுள்ளது.

ஐபிஎல் 2018 தொடரில் 11 ஆட்டங்களில் 368 ரன்கள் குவித்தார். இதில் 3 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும்.

கெயில் 10,000 ரன்களை கடக்கும் 14வது சர்வதேச வீரர். அதே சாதனையை லாராவுக்கு பின் நிகழ்த்தும் இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் வீரர்.

ஜாஸ் பட்லர் கூறும்போது, "கெயில் போன்ற வீரர்கள் இருக்கும் அணிக்கு எதிராக ஆடி வெல்வது மறக்க முடியாத நாட்களே" என்றார்.

மேற்கிந்திய தீவுகள் 418 என்ற இலக்கை துரத்தியது. ஆனால் 389 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கெயில் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்துள்ளார் கெயில்
  • சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களை அடித்த வீரர் கெயில்
  • கெயில் 10,000 ரன்களை கடக்கும் 14வது சர்வதேச வீரர்
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
Advertisement