உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் யுனிவர்சல் பாஸ் கெயில்!

Updated: 01 June 2019 13:10 IST

கெயில் 34 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கெயில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

Chris Gayle Breaks Record For Most Sixes In World Cup History
கெயில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களை எட்டினார். © AFP

2019 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கெயிலின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வெறும் 13.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது. கெயில் 34 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கெயில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார். உலகக் கோப்பை போட்டி தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை கெயில் பெற்றார். தற்போது 40 சிக்ஸர்கள் அடித்துள்ளார் கெயில். இது ஏபிடிவில்லியர்ஸை விட 3 சிக்ஸர்கள் அதிகம்.

கெயில் ஹசன் அலி பந்தில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்தார்.

கெயில், வஹாப் ரியாஸ் ஓவரில் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்து 40 சிக்ஸர் என்ற எண்ணிக்கையை எட்டினார்.

ரிக்கி பாண்டிங் 31 சிக்சர்களுடனும், மெக்குலம் 29 சிக்சர்களுடனும், கிப்ஸ் 28 சிக்ஸ்ர்களுடனும் முறையே 3 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

சச்சின் மற்றும் ஜெயசூர்யா 27 சிக்ஸர்களுடன் 6வது இடத்திலும், கங்குலி 25 சிக்சர்களுடன் 8வது இடத்திலும் , ஹெய்டன் 23, ரிச்சர்ட்ஸ் 22 முறையே ஒன்பது மற்றும் 10வது இடத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியை மேற்கிந்திய தீவுகள் வீரர் ஓஸ்னோ தாமஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி நிலைகுலைய வைத்தார். இது பாகிஸ்தானின் இரண்டாவது குறைந்தபட்ச உலகக் கோப்பை ஸ்க்கோராகும்.

2011 மற்றும் 2015 உலகக் கோப்பையில் இடம்பெறதா பாகிஸ்தான் வீரர் அமீர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • கெயில் 34 பந்தில் 50 ரன்கள் அடித்தார்
  • வெறும் 13.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி
  • கெயில், 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் கிறிஸ் கெயில்!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
Advertisement