29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!

Updated: 23 July 2019 14:22 IST

டி20 போட்டிகளில் 5 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றவர். அதன்பிறகு குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் இந்த பட்டியலில் இணைந்தனர். 

Yuzvendra Chahal Is
8 போட்டிகளில் ஆடி, 12 விக்கெட்டுகளை 36.83 சராசரியுடன் வீழ்த்தினார். © Twitter

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்தர சஹால், இன்று தன்னுடைய 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகக் கோப்பையில் சஹாலின் செயல்பாடு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. மிடில் ஓவர்களில் தன்னை நிரூபிக்கத் தவறினார் சஹால். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளுக்கு சஹால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், டி20 போட்டிகளுக்கு புதிய ஸ்பின்னர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். சஹாலின் பிறந்தநாளுக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் என பலரும் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. 10 ஓவர்கள் வீசிய சஹால் 63 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். 8 போட்டிகளில் ஆடி, 12 விக்கெட்டுகளை 36.83 சராசரியுடன் வீழ்த்தினார்.

டி20 போட்டிகளில் 5 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றவர். அதன்பிறகு குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் இந்த பட்டியலில் இணைந்தனர். 

டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் சிறந்த ஸ்கோராக உள்ளது.

2020 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் பவுலர்ஸை தேர்வு செய்வது பெரிய சவாலாக அமையவுள்ளது.

டி20 உலகக் கோப்பை அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உன்னைவிட 999 ரன்கள் அதிகம்" - சாஹலை கிண்டல் செய்த கே.எல்.ராகுல்
"உன்னைவிட 999 ரன்கள் அதிகம்" - சாஹலை கிண்டல் செய்த கே.எல்.ராகுல்
"என்னை விட 50 டெஸ்ட் போட்டிகள் அதிகம்" - கோலிக்கு வாழ்த்து சொன்ன சஹால்!
"என்னை விட 50 டெஸ்ட் போட்டிகள் அதிகம்" - கோலிக்கு வாழ்த்து சொன்ன சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
"என்னை மிஸ் செய்கிறீர்களா?" - பிசிசிஐயிடம் கேட்ட யுவேந்திர சஹால்!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
29வது பிறந்தநாளை கொண்டாடும் சஹாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!
Advertisement