ஆஸ்திரேலிய தொடரை வரவேற்கும் சாஹால் - குல்தீப் செல்ஃபி!

Updated: 13 February 2019 18:01 IST

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இருவரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக செய்துள்ள ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது

Yuzvendra Chahal, Kuldeep Yadav Tweet Homecoming Pictures At The End Of Tour Down Under
குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இருவரும் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். © AFP

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இருவரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக செய்துள்ள ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது. இருவரும் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். சஹால் தனது ட்விட்டில் தாய்நாடு அழைக்கிற‌து என்ற வார்த்தையுடன் ஹலீல் அகமது எடுத்த செல்ஃபியை பதிவிட்டிருந்தார். அதில் சஹால், குல்தீப் யாதவ் மற்றும் பன்ட் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல குல்தீப் யாதவ் செய்துள்ள ட்விட்டில் சிறப்பான சுற்றுப்பயணத்துக்கு பிறகு சொந்த நாட்டில் ஆடவிருக்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டில் உள்ள படத்தில் குல்தீப், சஹால், பன்ட் மற்றும் தவான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலிய தொடரை பொறுத்தமட்டில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றும் இந்தியா சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் 72 ஆண்டுகளில் முதல் முறையாக தொடரை வென்றது. 

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஹாட்ரிக் அரைசதமடித்து அசத்தினார். அடுத்து சென்ற நியூசிலாந்து தொடரிலும் இந்தியா ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. 

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஆடவுள்ளது. அதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 24ம் தேதி விசாகப்பட்டிணத்தில் துவங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றும் இந்தியா சாதனை படைத்தது.
  • ஆஸ்திரேலியாவில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது இந்தியா
  • டி20 தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
RCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு?- பின்னணி என்ன?
RCB அணியின் சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்னதான் ஆச்சு?- பின்னணி என்ன?
நடனமாடி வெற்றியை கொண்டாடிய சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்!
நடனமாடி வெற்றியை கொண்டாடிய சாஹல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்!
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
யுஸ்வேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோவில் இருக்கும் வீரர் யார்?
"அவர்கள் என்னை பின்பற்றுகிறார்கள்" - கோலி மற்றும் ராகுலை ட்ரோல் செய்த சாஹல்!
"அவர்கள் என்னை பின்பற்றுகிறார்கள்" - கோலி மற்றும் ராகுலை ட்ரோல் செய்த சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
Advertisement